காணிப்பாக்கம் கோவிலில் வழங்கப்பட்ட லட்டில் இரும்பு ஆணி

சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கத்தில் பிரசித்தி பெற்ற விநாயகர் கோவில் உள்ளது.

Update: 2017-06-02 22:30 GMT

திருப்பதி,

சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கத்தில் பிரசித்தி பெற்ற விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

இந்த நிலையில் விஜயவாடாவை சேர்ந்த 5 பேர் சாமி தரிசனம் செய்ய காணிப்பாக்கம் கோவிலுக்கு வந்தனர். சாமி தரிசனம் செய்துவிட்டு கோவிலில் உள்ள பிரசாத கடையில் 5 லட்டுகளை அவர்கள் வாங்கினர். அதனை சாப்பிடும் போது ஒரு லட்டில் இரும்பு ஆணி கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கோவில் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

கோவில் பிரசாதமான லட்டில் இரும்பு ஆணி இருந்தது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்