மளிகை கடை தீ விபத்து; ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்
கண்ணமங்கலம் அரு மளிகை கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. மேலும் கடையில் இருந்த ரொக்கப்பணம் ரூ.63 ஆயிரமும் எரிந்தது.
கண்ணமங்கலம்,
கண்ணமங்கலம் அருகே காட்டுக்காநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 60). இவர் நடுத்தெருவில் மளிகை கடை நடத்தி வந்தார். இவரது மனைவி தமயந்தி (55), மகன் ஜெகதீசன், மருமகள் கலையரசி (29) ஆகியோர் கடையை சுழற்சி முறையில் கவனித்து வந்தனர்.
இந்த நிலையில் மூர்த்தி வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு வீட்டுக்கு வந்தார்.
ரூ.1 லட்சம் பொருட்கள் நாசம்நேற்று அதிகாலை 4–30 மணி அளவில் கடையை திறக்க வந்தபோது உள்ளே இருந்து புகை வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடையை திறந்து பார்த்தபோது கடையில் வைத்திருந்த ரூ.63 ஆயிரம் ரொக்கப்பணம், ரூ.1 லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்கள் எரிந்து நாசமானது தெரிய வந்தது.
அவர் சத்தம் போடவே அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து கடையில் ஆங்காங்கே எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். மேலும், ஆரணி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆரணி தீயணைப்பு நிலைய அதிகாரி பேச்சிக்காளை மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீ பரவாமல் இருக்க முன் எச்சரிக்கை பணியில் ஈடுபட்டனர்.
மின்கசிவுஇதுகுறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் வருவாய் ஆய்வாளர் திருவேங்கடம், காட்டுக்காநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் துரைராஜ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். இந்த சம்பவம் குறித்து ஆரணி இடர்பாடு நிவாரண தாசில்தாருக்கு மூர்த்தி மனு கொடுத்தார்.
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.