டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்
ராவுத்தன்பட்டியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாமரைக்குளம்,
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அங்கிருந்து அந்த டாஸ்மாக்கடை அகற்றப்பட்டது. பின்னர் அரியலூர் - ராவுத்தன்பட்டிக்கு செல்லும் சாலையில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ராவுத்தன்பட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று ராவுத்தன்பட்டி பகுதியில் அமைய உள்ள டாஸ்மாக் கடை முன்பு திரண்டனர். பின்னர் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவித்த தாவது:-
ராவுத்தன்பட்டியில் அமைக்கப்படும் டாஸ்மாக் கடைக்கு அருகில் பஸ் நிறுத்தம் மற்றும் இரண்டு திருமண மண்டபங்கள் உள்ளன. இங்கு டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டால் பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்றும், பஸ் நிறுத்தத்திலிருந்து இரவு நேரங்களில் ராவுத்தன்பட்டிக்கு நடந்து செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்படும். மேலும் இச்சாலைக்கு அருகில் தான் பைபாஸ் ரோடு செல்கிறது. இதனால் அதிக விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ், இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி மற்றும் வருவாய்த்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அதிகாரிகள் இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்படாது என்று உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.