திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தெப்பக்குளம் தூர்வாரும் பணி தொடங்கியது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தெப்பக்குளம் தூர்வாரும் பணி நேற்று தொடங்கியது.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தெப்பக்குளம் தூர்வாரும் பணி நேற்று தொடங்கியது.
தெப்பக்குளம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம், ஆவுடையார்குளம் அருகில் உள்ளது. மாசி திருவிழாவின்போது தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெறும். தற்போது கடும் வறட்சி நிலவுவதால் தெப்பக்குளத்தில் தண்ணீரின்றி வறண்டு உள்ளது.
எனவே பருவ மழைக்கு முன்பாக, தெப்பக்குளத்தை தூர்வார வேண்டும் என்று பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
தூர்வாரும் பணி
இதையடுத்து தெப்பக்குளத்தை தூர்வாரும் பணி நேற்று தொடங்கியது. கோவில் இணை ஆணையர் வரதராஜன் தலைமை தாங்கினார். கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன், தெப்பக்குளத்தை தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார். குளத்தில் தேங்கியிருந்த குப்பைகள், கழிவுகளை கோவில் ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் அகற்றி சுத்தம் செய்தனர். பின்னர் அங்கு புதிய மணலை நிரப்பும் பணியில் ஈடுபட்டனர்.
கோவில் இளநிலை செயற்பொறியாளர் சந்தானகிருஷ்ணன், உதவி பொறியாளர் கந்தசாமி, சிவா, கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.