தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் சிமெண்டு குழாயை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
பரப்பாடி பகுதியில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் சிமெண்டு குழாயை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இட்டமொழி,

இரும்பு குழாய் பதிக்க எதிர்ப்பு
நாங்குநேரியில் இருந்து திசையன்விளைக்கு பரப்பாடி வழியாக தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்துக்கு குழாய் பதிக்கப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பரப்பாடி குளத்து கரை பகுதியில் இந்த குடிநீர் குழாயில் வால்வு ஒன்று உள்ளது. குடிநீர் குழாயில் தண்ணீர் நிரம்பி செல்லும்போது, வால்வு வழியாக தண்ணீர் வெளியேறி வரும்.
இந்த தண்ணீரை பரப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பிடித்து பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில், நாங்குநேரி–உவரி சாலையை விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. அதே நேரத்தில் இந்த குடிநீர் திட்டத்துக்கு பதிக்கப்பட்டு உள்ள சிமெண்டு குழாயை அகற்றிவிட்டு, இரும்பால் ஆன குழாயை பதிக்கும் பணி நடந்து வருகிறது. அவ்வாறு இரும்பு குழாயை பதிக்கும்போது பரப்பாடி பகுதியில் குழாயில் வால்வு வராது. இதனால் தங்களுக்கு குடிநீர் கிடைக்காது என்று கருதி இரும்பு குழாய் பதிக்க பரப்பாடி பொதுமக்களிடம் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
முற்றுகை போராட்டம்
இந்த நிலையில் நேற்று காலை பரப்பாடி பகுதியில் இரும்பு குழாய் பதிக்கும் பணியில் ஈடுபடுவதற்காக பணியாளர்கள் வந்திருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் அங்கு வந்து பணியை மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பொறியாளர்கள் ஜிந்தா, ரேனியஸ், நாங்குநேரி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் பிச்சுமணி, வடக்கு விஜயநாராயணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெர்ஜின் சேவியோ ஆகியோர் விரைந்து வந்து, போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தை
அப்போது போராட்டக்காரர்கள், தங்களது பகுதிக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து சீராக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் இங்குள்ள வால்வை அகற்றும் வகையில் இரும்பு குழாய் பதிக்கக்கூடாது என்று கூறினர். அதற்கு அதிகாரிகள், இந்த விவகாரம் குறித்து நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கலாம் என்று கூறினர். இதில் சமரசம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன்பிறகு இரும்பு குழாயை பதிக்கும் பணியும் நிறுத்தப்பட்டது.