“உலகின் சத்துணவு!”
மிக எளிதாக உடலுக்குத் தேவையான சத்துகளை பெற்றுத் தந்துவிடக்கூடியது பால். சரிவர சாப்பிடாத குழந்தைகளின் ஆற்றல் தேவையை ஈடு செய்வது பால்தான்.
மிக எளிதாக உடலுக்குத் தேவையான சத்துகளை பெற்றுத் தந்துவிடக்கூடியது பால். சரிவர சாப்பிடாத குழந்தைகளின் ஆற்றல் தேவையை ஈடு செய்வது பால்தான். எலும்புகளுக்கு மிக அவசியமான கால்சியம் சத்து பெருமளவு பாலில் இருந்தே கிடைக்கிறது. மற்ற உணவுப் பொருட்களில் இருப்பதைவிட பாலில் பல மடங்கு மிகுதியாக கால்சியம் சத்து உள்ளது. சுருக்கமாகச் சொல்வதானால் உலகின் சத்துணவு பால் என்றால் மிகையில்லை. எளிதாக பருகவும், அதிக ஆற்றலை பெற்றுக் கொள்ளவும் உதவும் பாலின் சிறப்புகளை பட்டியலிடுவோம்...* பால் அதிகமான புரதம் மற்றும் கால்சியம் சத்து மிகுந்தது. இதில் இல்லாத சத்துகளே இல்லை எனலாம்.
* 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பசுக்களின் பாலை மனிதன் அருந்தி வந்துள்ளான். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் பகுதியில் பால் அருந்தும் பழக்கம் ஏற்பட்டதாக கணிக்கப்பட்டுள்ளது.
* உலகின் பால் தேவையை 90 சதவீதம் பூர்த்தி செய்யக் கூடியவை பசுக்களே. எருமை, ஆடு, ஒட்டகம், கழுதை உள்ளிட்ட சில விலங்குகளிடம் இருந்தும் பால் பெறப்படுகிறது.
* பாலில் இருந்து தயிர், மோர், நெய், வெண்ணெய் பெறப்படுகிறது. பாலாடைக்கட்டி மற்றும் கொழுப்பு பொருட்கள் பிரிக்கப்பட்டு பல்வேறு உணவுப் பண்டங்களில் சேர்க்கப்படுகிறது.
* ஒரு பசுமாடு தன் ஆயுள் காலத்தில் 2 லட்சம் டம்ளர் பால் தரும்.
* பண்ணை மாடுகளே உலகின் 90 சதவீத பால் தேவையை பூர்த்தி செய்கின்றன.
* வணிக ரீதியான உலகின் முதல் பால்பண்ணை சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் 1986-ல் தொடங்கப்பட்டது. அங்கு ஒட்டகப்பால் ஒரு லிட்டர் 1.2 பவுண்டு விலைக்கு விற்கப்பட்டது.
* 1984-ல் சுவீடன் விஞ்ஞானிகள், மாடுகளின் மடியில் எந்திர டப்பாக்களை இணைத்துவிடுவதன் மூலம், கிருமித் தொற்று இல்லாமல் மேம்படுத்தப்பட்ட பாலை பெற முடியும் என்று கண்டுபிடித்தனர்.
* பால்-கிரீம் பொருட்கள் விற்பனைக்கு வந்து சுமார் 70 ஆண்டுகள் ஆகிறது. 1950-ம் ஆண்டு வாக்கில் இவை சந்தைக்கு வரத் தொடங்கியது.
* பசும்பாலை அதன் கன்று குடித்த பிறகே கறந்து பயன்படுத்த வேண்டும்.
* மாட்டின் மடி அதிகபட்சம் 22 லிட்டர் பால் பிடிக்கும்.
* பாலில் 4 சதவீதமே கொழுப்பு உள்ளது. கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் புரதம் மிகுந்திருக்கும்.
* எருமைப்பாலில் பசும்பாலைவிட 25 சதவீதம் அதிகமாக புரதம் மிகுந்துள்ளது.
* பால் சாப்பிடாதவர்களுக்கு உடலுக்குத் தேவையான கால்சியம் கிடைப்பது அரிது.
* பசும்பாலைவிட ஆட்டுப்பாலில் அதிக வெண்ணெய் கொழுப்பு உள்ளது.
* ஆரம்ப காலங்களில் பூமியை வலம் வந்த கண்டுபிடிப்பாளர்கள், மாலுமிகள் தங்களுடன் ஆடுகளையும் அழைத்துச் சென்றனர். தூய பாலை பெறுவதற்காகவே அவர்கள் ஆட்டுடன் பயணம் செய்தனர்.
* ஆட்டுப்பால் 20 நிமிடங்களில் ஜீரணமாகிவிடும். பசும்பால் செரிமானம் ஆக ஒரு மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.
* ஒரு கோப்பை பாலில் கிடைக்கும் கால்சியத்தைப் பெற, 16 கோப்பை கீரை சேர்க்க வேண்டும். 48 கோப்பை கீரையை உண்டால்தான் மனிதனுக்கு தினசரி தேவைப்படும் கால்சியத்தை ஈடு செய்ய முடியும்.
* நீரோ மன்னனின் இரண்டாம் மனைவியான போப்பே, 500 கழுதைகளை வளர்த்தார். தினமும் கழுதைப் பாலில் குளிப்பதை அவர் வழக்கமாக வைத்திருந்தார்.
* இங்கிலாந்தில் ஆண்டு தோறும் 1307 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது.
* சிலரது உடல்தன்மை பாலில் உள்ள சர்க்கரைப் பொருளான லாக்டோசை எளிதில் செரிக்காது. இதனால் பால் ஒவ்வாமை ஏற்படும். லாக்டோஸ் நீக்கப்பட்ட பால் சந்தையில் கிடைக்கிறது.
* பால் சாப்பிடுவது சிறுநீரக கல்லடைப்பு ஏற்படுவதை தடுப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாலில் உள்ள கால்சியம் சிறுநீரக கல் உருவாகாமல் தடுக்கிறது.
* ஆஸ்திரேலியாவில் மாடுகள் இனமே கிடையாது. இங்கிலாந்தில் இருந்து 1788-ல் 2 காளைகளும், 7 பசுக்களும் அங்கே கொண்டு செல்லப்பட்டன. தற்போது 20 லட்சம் பசுமாடுகளுக்கு மேல் ஆஸ்திரேலியாவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
* அமெரிக்காவில் மதிய உணவு ஒழுங்குமுறை விதிகளின்படி பால் வழங்கும் உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில நாடுகளும் இதை பின்பற்றுகின்றன.
* உலகில் அதிகமாக பால் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அவர்கள் ஆண்டிற்கு 9100 கோடி கிலோ பால் உற்பத்தி செய்கிறார்கள். இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது. 6000 கோடி கிலோகிராம் அளவுள்ள பாலை நாம் உற்பத்தி செய்கிறோம். எருமைப்பால் உற்பத்தியில் இந்தியா, உலகிலேயே முதல் இடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான், வங்காளதேசம், அரபுநாடுகள், நேபாளம், பூடான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு பால் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
* ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தாய்ப்பாலே சிறந்தது. 1 வயது முதல் 10 வயதுடைய குழந்தைகளுக்கு தினமும் குறைந்தபட்சம் 100 மில்லி பால் அவசியம். 18 வயதுக்கு உட்பட்டவர்கள் தினமும் 250 மில்லி பால் சாப்பிட வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 200 மில்லி பால் சேர்த்துக் கொள்ளலாம்.
பாலின் மகத்துவம்
ஆண்டு தோறும் ஜூன் 1-ந் தேதி உலக பால் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. உலகில் அதிகமாக பருகப்படும் பானமான, பாலில் (100 கிராம்) உள்ள சத்துக்களின் பட்டியலை அறிவோம்..
ஆற்றல் - 66 கலோரி
கால்சியம் - 120 மில்லிகிராம்
புரதம் - 3.2 கிராம்
கார்போஹைட்ரேட் - 4.8 கிராம்
கொழுப்பு - 3.9 கிராம்
கொலஸ்ட்ரால் - 14 மில்லி கிராம்
தாதுஉப்புக்கள் - மெக்னீசியம், பொட்டாசியம், ரிபோபிளேவின், தயமின், வைட்டமின்-ஏ, பி12, வைட்டமின்-டி, வைட்டமின்-கே, செலினியம்.