வருகிற 9–ந் தேதி தமிழ்நாடு சட்டமன்ற உறுதிமொழிக்குழு சேலம் வருகை

வருகிற 9–ந் தேதி தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுதிமொழிக்குழு சேலம் வருகை தர உள்ளது.

Update: 2017-06-01 23:43 GMT

சேலம்,

சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2016–2018–ம் ஆண்டிற்கான அரசு உறுதிமொழிக்குழு வருகிற 9–ந் தேதி ஆய்வுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் சம்பத் தலைமையில் நேற்று நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், மகளிர் திட்ட இயக்குனர் ஈஸ்வரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜய்பாபு மற்றும் அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாவட்ட சம்பத் பேசியதாவது:–

9–ந் தேதி வருகை

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2016–2018–ம் ஆண்டிற்கான உறுதிமொழிக்குழு வருகிற 9–ந் தேதியன்று சேலம் மாவட்டத்தில் ஆய்வுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த ஆய்வுப்பயணத்தில் குழுத் தலைவர் சி.ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் அருண்குமார், எழிலரசன், குணசேகரன், துரை.சந்திரசேகரன், தாயகம் கவி, எதிர்க்கோட்டை எஸ்.ஜி. சுப்பிரமணி உள்பட 12 உறுப்பினர்களும், 7 செயலக அலுவலர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் இக்குழுவானது ஆய்வு பயணத்தின் போது மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்யவும், தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள உறுதிமொழிகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் துறை சார்ந்த தலைமை அலுவலர்களுடன் ஆய்வும் நடத்துகிறது. தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுதி மொழிக்குழு சேலம் வருகையின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


மேலும் செய்திகள்