ஜமாபந்தி நிறைவு விழாவில் 2,803 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
வந்தவாசியில் நடந்த ஜமாபந்தி நிறைவு விழாவில் 2 ஆயிரத்து 803 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்.
வந்தவாசி,
வந்தவாசியில் நடந்த ஜமாபந்தி நிறைவு விழாவில் 2 ஆயிரத்து 803 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்.
ஜமாபந்தி நிறைவு விழாவந்தவாசி தாலுகா அலுவலகத்தில் கடந்த 19–ந் தேதி தொடங்கி ஜமாபந்தி நடைபெற்று வந்தது. ஜமாபந்தி நடைபெற்ற நாட்களில் 4 ஆயிரத்து 87 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. இதில் 2 ஆயிரத்து 803 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீதமுள்ள 1,284 மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து நேற்று ஜமாபந்தி நிறைவு விழா மற்றும் விவசாயிகள் மாநாடு வந்தவாசி சீனிவாசா திருமண மண்டபத்தில் நடந்தது.
விழாவுக்கு மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் தூசி.மோகன், எஸ்.அம்பேத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு, 2,803 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.
விவசாயிகள் வெளிநடப்புஇதில் வந்தவாசி தாசில்தார் எஸ்.முருகன், சமூக பாதுகாப்பு தாசில்தார் கே.ஆர்.நரேந்திரன், வட்ட வழங்கல் அலுவலர் சங்கரன், வந்தவாசி நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் டி.கே.பி.மணி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சீ.சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் டி.வி.பச்சையப்பன், எம்.கே.ஏ.லோகேஷ்வரன், அர்ச்சுனன், தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் கே.ஆர்.சீதாபதி, மாவட்ட துணை செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக விழாவில் கலந்துகொண்ட 10–க்கும் மேற்பட்ட விவசாயிகள், விழாவில் தங்களுக்கு பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக்கூறி விழாவில் இருந்து வெளிநடப்பு செய்ததுடன் மண்டபத்தின் முன்புறத்தில் நின்று கோஷமிட்டனர். அதைத் தொடர்ந்து அவர்களை போலீசார் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, பின்னர் விடுவித்தனர்.