வந்தவாசியில் இந்திய குடியரசு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசின் தடை சட்டத்தை கண்டித்து வந்தவாசி தேரடி தபால் நிலையம் முன்பு இந்திய குடியரசு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது

Update: 2017-06-01 22:57 GMT

வந்தவாசி,

இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசின் தடை சட்டத்தை கண்டித்து வந்தவாசி தேரடி தபால் நிலையம் முன்பு இந்திய குடியரசு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் வந்தை எம்.மோகன் தலைமை தாங்கினார். இளைஞர் அணி தலைவர் கவுரிசங்கர், அமைப்புச் செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் பி.கே.மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வந்தவாசி நகர தலைவர் எம்.ரமேஷ்பாபு வரவேற்றார்.

ஆர்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் ஜெ.டிக்ரூஸ் என்ற ராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் எம். கோவிந்தராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் வந்தவாசி நகரச் செயலாளர் ஏ.குட்டி, ஒன்றிய செயலாளர் பி.பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்