ஏரியில் இருந்து விற்பனைக்காக மண் எடுத்த 6 வாகனங்கள் பறிமுதல்

ஆம்பூர் அருகே பெரியவரிகம், சின்னவரிகம் ஊராட்சிக்குட்பட்ட 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது.

Update: 2017-06-01 22:50 GMT

ஆம்பூர்,

ஆம்பூர் அருகே பெரியவரிகம், சின்னவரிகம் ஊராட்சிக்குட்பட்ட 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் விவசாய பயன்பாட்டுக்கு அரசு அனுமதியின் பேரில் விவசாயிகள் மண் எடுத்து சென்று வருகின்றனர். ஆனால் சிலர் அனுமதி பெறாமல் திருட்டுத்தனமாக பொக்லைன் எந்திரம் மூலம் ஏரியில் இருந்து மண் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர்.

இதனை அறிந்த அப்பகுதி மக்கள் நேற்று அனுமதியின்றி ஏரியில் மண் எடுத்த வாகனங்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆம்பூர் தாசில்தார் ரூபிபாய் மற்றும் வருவாய்த்துறையினர் விரைந்து சென்று அனுமதியின்றி மண் எடுத்த 4 டிராக்டர், ஒரு பொக்லைன் எந்திரம், ஒரு மினிவேன் ஆகிய 6 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

விவசாய பயன்பாட்டுக்காக அரசு ஏரிகளில் மண் எடுக்க அனுமதி கொடுத்த நிலையில், தற்போது விற்பனைக்காக மண் கடத்தப்படுவதை பொதுமக்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்