மராட்டியத்தில், மாநில அரசுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை
மராட்டியத்தில் மாநில அரசுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பல இடங்களில் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.
மராட்டியத்தில் மாநில அரசுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பல இடங்களில் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர். கோபர்காவில் லாரி தீ வைத்து எரிக்கப்பட்டது.
மும்பை
மராட்டியத்தில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு மாவட்டங்கள் வறட்சியின் கோர பிடியில் சிக்கி தவித்தன. இதனால் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
கோரிக்கை
எனவே விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சிகளும், அவர்களுடன் சேர்ந்து ஆளும் கூட்டணி கட்சியான சிவசேனாவும் விவசாய கடனை தள்ளுபடி செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டது.
கடந்த மார்ச் மாதம் தாக்கலான மராட்டிய பட்ஜெட்டில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. இது விவசாயிகள் மத்தியில் மிகுந்த அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் உண்டாக்கியது.
விவசாய கடன்
இதன்பின்னர் உத்தரபிரதேசத்தில் ஆட்சி அமைத்த பாரதீய ஜனதா அரசு பயிர்க்கடன் தள்ளுபடி செய்து விட்டதை சுட்டிக்காட்டி மராட்டியத்திலும் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என போராட்டங்கள் நடந்தன.
இந்த நிலையில், பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயத்திற்கு இலவச மின்சாரம், விவசாயிகளுக்கு ஓய்வூதியம், பாலுக்கு கூடுதல் கொள்முதல் விலை, வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு நியாயமான கொள்முதல் விலை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கிஷான் கிராந்தி மோர்ச்சா என்ற விவசாய சங்கம் ஜூன் 1-ந் தேதி முதல் விவசாயிகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் செய்வோம் என அறிவித்தது.
இது தொடர்பாக அந்த சங்கத்தை சேர்ந்த விவசாய பிரநிதிகளுடன் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேச்சுவார்த்தை நடத்தினார்.
விவசாயிகள் போராட்டம்
ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் விவசாயிகளின் காலவரையற்றை போராட்டத்தை ஒத்திவைக்கும்படி கேட்டுக் கொண்டார். எனினும், இதை விவசாயிகள் நிராகரித்தனர்.
இதையடுத்து தாங்கள் அறிவித்தபடி நேற்று முதல் விவசாயிகள் தங்கள் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினார்கள்.
மாநிலத்தின் பல இடங்களில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அகமதுநகர், ஷீரடி, பண்டர்பூர், அவுரங்காபாத், புனே உள்ளிட்ட பகுதிகளில் நகரப்புறங்களை நோக்கி சென்ற பால்வண்டிகளை மறித்து நிறுத்தி பாலை சாலையில் திறந்து விட்டு அரசுக்கு ஆவேசத்துடன் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
சாலையில் வீசினர்
இதனால் சாலைகளில் பாலாறு பெருக்கெடுத்து ஓடியது. புனே, டாவுண்ட் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் விவசாயிகள் ஏற்றுமதிக்காக லாரிகளில் ஏற்றப்பட்டிருந்த காற்கறிகளையும், பழங்களையும் சாலையில் வீசி எறிந்தனர்.
பல இடங்களில் விவசாய உற்பத்தி பொருட்கள் கால்நடைகளுக்கு தீனியாக போடப்பட்டன.
அகமதுநகர் மாவட்டம் கோபர்காவில் காய்கறி ஏற்றி வந்த லாரி ஒன்று தீ வைத்து கொளுத்தப்பட்டது பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
அவுரங்காபாத்தில் வன்முறை
இதேபோல விவசாயிகளின் போராட்டத்தில் ஆங்காங்கே சிறு, சிறு வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. அவுரங்காபாத்தில் காய்கறி சந்தையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பழ வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, வன்முறையாக மாறியது. பழவியாபாரிகள் தாக்கியதில், 6 கிஷான் கிராந்தி என்ற விவசாய அமைப்பின் தலைவர் சூர்யவன்ஷி உள்பட 6 பேர் காயம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து, அங்கு பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டனர். 50-க்கும் மேற்பட்ட பழ வியாபாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மும்பையில் தட்டுப்பாடு?
விவசாயிகள் தங்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாக தலைநகர் மும்பைக்கு பால், காய்கறிகள் மற்றும் பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் செல்ல முடியாதவாறு போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதனால் மும்பையில் பால், காய்கறிகள், பழங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. போராட்டம் பற்றி கிஷான் கிராந்தி மோர்ச்சா விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், “எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்த காலவரையற்ற போராட்டம் தொடரும். தலைநகர் மும்பைக்கு மட்டுமல்ல எந்த நகரங்களுக்கும் உணவு பொருட்கள் செல்ல விடாமல் தடுத்து கடும் நெருக்கடியை உண்டாக்குவோம்” என்றனர்.