திருப்பத்தூர்- மானாமதுரை சாலையின் நடுவே தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்
திருப்பத்தூர்- மானாமதுரை சாலையில் அடிக்கடி விபத்துகள் நடைபெறுவதை தடுக்க சாலையின் நடுவே தடுப்புச்சுவர் அமைத்திட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை,
திருப்பத்தூரில் இருந்து மானாமதுரை வரையிலான தேசிய நெடுஞ்சாலை சமீபத்தில் தான் 100 மீட்டர் சாலையாக அகலப்படுத்தப்பட்டது. அத்துடன் சிவகங்கை நகருக்குள் செல்லாமல் மானாமதுரை செல்லும் வகையில் சுற்றுச் சாலையும் அமைக்கப்பட்டது. வழக்கமாக இது போன்ற சாலை அமைக்கும் போது சாலையின் நடுவே இரு புறமும் வாகனங்கள் சென்று வர வசதியாக ரோட்டை பிரிக்கும் வகையில் சாலையின் நடுவே டிவைடர் என்று அழைக்கப்படும் சிறிய அளவிலான பிரிவு தடுப்பு சுவர் அமைப்பார்கள்.
தொடர் விபத்துகள்
ஆனால் இந்த சாலையில் அது போல் அமைக்கப்படவில்லை. இந்தச் சாலை அகலமாக இருப்பதாலும், புதியதாக போடப்பட்டதாலும் இந்த பகுதியில் செல்லும் வாகனங்கள் அதி வேகமாக விதி மீறி செல்கின்றன. இதனால் இந்தப் பகுதியில் தொடர்ந்து விபத்துகள் நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. நேற்று முன் தினம் இரவு சிவகங்கை ராஜசேகரன் தெருவைச் சேர்ந்த முத்துமணி (வயது59) என்ற ஓய்வு பெற்ற அரசு அலுவலரும், வேளாண்மைத் துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த கிருஷ்ணன் (வயது 38) என்பவரும் மதகுபட்டியில் இருந்து சிவகங்கைக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த போது எதிரே வந்த கார் மோதியதில் பரிதாபமாக பலியாயினர்.
கோரிக்கை
எனவே இந்தச் சாலையில் விபத்துக்களை தடுப்பதற்கு உடனடியாக சாலையின் நடுவே தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தி உள்ளனர்.