விசுவக்குடி அணை பகுதியில் ரூ.55 லட்சத்தில் அடிப்படை வசதிகள்
விசுவக்குடி அணை பகுதியில் ரூ.55 லட்சம் மதிப்பில் புதிய தார்ச்சாலை, சமுதாய மன்றம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.;
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் விசுவக்குடியில் பச்சைமலை-செம்மலை இடையே அணை ரூ.33 கோடி மதிப்பில் கட்டப்பட்டு கடந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. ஆனால் பணிகள் முழுமை அடையும் நிலையில் 2015-ல் பருவமழையின் போது விசுவக்குடி அணை முழுமையாக நிரம்பியது.
கல்லாறு ஓடையின் குறுக்கே 665 மீட்டர் நீளம் உள்ள கரையுடன் இந்த அணை கட்டப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 500 ஏக்கர் ஆயக்கட்டு பகுதியும், மொத்தம் 5.61 சதுர மைல்கள் நீர்ப்பிடிப்பு பகுதிகளையும் கொண்ட இந்த அணை 34 அடி உயரம் கொண்டது. இதில் 41 மில்லியன் கனஅடி நீரை தேக்கி வைத்து 30.67 மில்லியன் கன அடி நீரை பாசனத்திற்கும், 10 மில்லியன் கன அடி நீரை குடிநீர் தேவைக்கும் பயன்படுத்த முடியும். அரும்பாவூர், பூலாம்பாடி பேரூராட்சி, அன்னமங்கலம், அரசலூர் கிராமங் களுக்கு மாற்று குடிநீர் ஆதாரமாக திகழும் விசுவக்குடி அணையில் 10.30 மீட்டர் ஆழத்திற்கு நீரை சேமிக்க இயலும்.
ரூ.35 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை
இந்த அணைக்கு சென்றுவர காட்டுவழி மண்பாதையாக இருந்தது. தற்போது தார்ச்சாலை ரூ.35 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. ரூ.20 லட்சம் மதிப்பில் ஊரக வளர்ச்சி துறை மூலம் சமுதாய மன்றம் அணையின் மேல்பகுதியில் புதிதாக கட்டப்பட்டது.
எதிர் காலத்தில் இந்த அணைக்கு சுற்றுலா வந்து செல்லும் சிறுவர்-சிறுமியர்கள் மகிழ்வுடன் நேரத்தை செலவிடுவதற்காக அணையின் வடக்கு பகுதியில் ஏறத்தாழ 4 ஏக்கர் பரப்பில் சுமார் ரூ.1 கோடி மதிப்பில் பொழுதுபோக்கு பூங்கா அமைப்பதற்கு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதி காரிகள் தெரிவித்தனர்.
2016-ல் வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் தற்போது விசுவக்குடி அணை நீரின்றி வறண்டு காணப்படுகிறது.
பொதுமக்கள் கோரிக்கை
கடந்த மே மாதத்தில் கோடை மழை 3 முறை இப் பகுதியில் பெய்தது. கடந்த மே மாதம் 26-ந்தேதி பச்சைமலை அடிவாரப்பகுதியில் பலத்தமழை பெய்ததால், பெரம்பலூர் மாவட்டத்தின் டெல்டா பகுதிபோல் உள்ள விசுவக்குடி, பூஞ்சோலை, அன்னமங்கலம், அரசலூர் ஆகிய பகுதிகளில் விவசாய பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. கடந்த ஆண்டு பருவ மழையின்மையால் கடும் வறட்சியால் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையையும், வடகிழக்கு பருவமழையையும் இப்பகுதி விவசாயிகள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். விசுவக்குடி அணையை மேலும் ஆழப்படுத்தி நீர்ப்பிடிப்பு பகுதியை அதிகரிக்க வேண்டும் என்றும், அணைக்கு வரும் வழியில் உயர் கோபுர மின்விளக்குகளை உடனே அமைக்கவேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.