சாலையில் படுத்து கிடந்த போதை ஆசாமியால் பக்தர்கள் சென்ற வேன் விபத்தில் சிக்கியது
துவரங்குறிச்சி அருகே சாலையில் படுத்து கிடந்த போதை ஆசாமியால் பக்தர்கள் சென்ற வேன் விபத்தில் சிக்கியது. இதில் 14 பேர் காயம் அடைந்தனர்.
மணப்பாறை,
சென்னை குரோம்பேட்டை நாகல்கேணி பகுதியில் இருந்து 18 பேர் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமிகும்பிடுவதற்காக நேற்று முன்தினம் மதியம் ஒரு வேனில் புறப்பட்டனர். வேனை சென்னை பள்ளிக்கரனை ஏரிக்கரை தெருவைச் சேர்ந்த பெரியசாமி(வயது 37)ஓட்டினார். இதில் குரோம்பேட்டை நாகல்கேணி பகுதியைச் சேர்ந்த விஜயன்(40), அவரது மனைவி மைதிலி(35), மகள் மிருதுளா( 11),மகன் கார்த்திக்(4), சிவானந்தம்( 70), அவரது மனைவி மல்லிகா(68), மகள் விமலா, புதுச்சேரியைச் சேர்ந்த விஜி(38), சிவகாமி(40), இலக்கியா(7),சாய்சரண்(6), ராணிப்பேட்டையைச் சேர்ந்த ராஜா(48),அவரது மனைவி சித்ரா(40), மகள் பிரியா(18) உள்பட 18 பேர் பயணம் செய்தனர்.
ஸ்ரீரங்கம் வந்தனர்
இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவு ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு பின்னர் திருச்செந்தூர் நோக்கி புறப்பட்டனர். வேன் நேற்று முன்தினம் நள்ளிரவு திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த அதிகாரம் அருகே சென்று கொண்டிருந்த போது சாலையில் ஒருவர் மயக்கத்தில் கிடந்தார். மேலும் அவரின் அருகே மோட்டார் சைக்கிளும் நின்று கொண்டிருந்தது.
வேன் விபத்தில் சிக்கியது
இதைப்பார்த்த வேன் டிரைவர் வேனை ஓரமாக திருப்ப முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி சாய்ந்தது. இதில் வேனுக்குள் இருந்தவர்கள் ஒருவர் மேல் ஒருவராக விழுந்ததில் 14 பேருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் காயமடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 2 பேர் மட்டும் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது நள்ளிரவில் போதையில் வந்த மர்ம நபர் ரோட்டில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு அங்கேயே படுத்திருந்ததும் அவர் மீது மோதாமல் இருக்க டிரைவர் வேனை திடீரென திருப்பிய போது விபத்துக்குள்ளானதும் தெரியவந்தது.
போலீசார் விரட்டி விட்டனர்
வேன் விபத்துக்குள்ளானதும் போதை ஆசாமி அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்று விட்டார். விபத்து நடப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு தான் அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார் போதை ஆசாமியை அங்கிருந்து விரட்டிவிட்டனர். ஆனால் போதை ஆசாமி மீண்டும் வந்து படுத்துக் கொண்டதால் இந்த விபத்து நடந்து உள்ளது.
இந்த விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.