உழவன் எக்ஸ்பிரஸ் என்ஜினில் தீ: ஆடுதுறையில் 3 மணி நேரம் காத்து நின்ற ரெயில்கள்
என்ஜினில் திடீரென தீப்பிடித்ததால் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் ஆடுதுறை ரெயில் நிலையத்தில் ராமேசுவரம்-வாரனாசி, மைசூர்-மயிலாடுதுறை ஆகிய 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 3 மணி நேரம் காத்து நின்றதால் பயணிகள் அவதிப்பட்டனர்.
திருவிடைமருதூர்,
ராமேசுவரம்-வாரனாசி எக்ஸ்பிரஸ், மைசூர்-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ஆகிய 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நேற்று காலை தஞ்சை மாவட்டம் ஆடுதுறை ரெயில் நிலையத்துக்கு வந்தன. அப்போது சென்னை-தஞ்சை இடையேயான உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆடுதுறையை கடந்து செல்லும் நேரம் என்பதால் 2 எக்ஸ்பிரஸ் ரெயில்களும் ஆடுதுறை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட சிக்னல் கிடைக்கவில்லை. இதையடுத்து 2 ரெயில்களும் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டன.
இந்த நிலையில் மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்ட உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் குத்தாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது என்ஜினில் திடீரென தீப்பிடித்தது. இதனால் அந்த ரெயில் நடு வழியிலேயே நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக ராமேசுவரம்-வாரனாசி எக்ஸ்பிரஸ், மைசூர்-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ஆகிய 2 எக்ஸ்பிரஸ் ரெயில்களும் ஆடுதுறை ரெயில் நிலையத்திலேயே 3 மணி நேரம் காத்து நின்றன.
பயணிகள் அவதி
3 மணி நேரத்துக்கு பின்னர் என்ஜின் கோளாறு சரி செய்யப்பட்டு, உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆடுதுறை ரெயில் நிலையத்தை கடந்து சென்றது. அதன் பின்னர் வாரனாசி எக்ஸ்பிரஸ் ரெயிலும், மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயிலும் ஆடுதுறை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றன. 3 மணி நேர தாமதம் ரெயில் பயணிகளை மிகவும் அவதிக்கு உள்ளாக்கியது.