ரிஷிவந்தியம் தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. அறிக்கை
கருணாநிதியின் பிறந்த நாள் விழாவை ரிஷிவந்தியம் தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என்று வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
திருக்கோவிலூர்,
தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்–அமைச்சருமான மு.கருணாநிதியின் 94–வது பிறந்த நாள் விழா நாளை(சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. அவருடைய பிறந்தநாளை தி.மு.க.வினர் மட்டுமின்றி ஒவ்வொரு தமிழர்களும் கொண்டாடவேண்டும். அரசியல் வாழ்வில் 60 வருடம் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றவர்.நலத்திட்ட உதவிகள்எனவே அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கட்சி கொடியை ஏற்றியும், பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கியும் கொண்டாட வேண்டும். மேலும் பள்ளி மாணவ–மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் போன்ற கல்வி உபகரணங்களும், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர், முதியோர், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.