கும்மிடிப்பூண்டி அருகே மதுக்கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி அருகே மதுக்கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-06-01 22:00 GMT

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டியை அடுத்த தேவம்பேடு கிராமத்தில் மதுக்கடை உள்ளது. நேற்று அந்த கடையை அதன் விற்பனையாளர் ஆறுமுகம் (வயது 39) திறக்க வந்தார். அப்போது அங்கு வந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மதுக்கடையை திறக்க அனுமதிக்காமல் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

மனு அளித்து தீர்வு காண வேண்டும்

அப்போது இதே பகுதியில் 4 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் மதுக்கடை குறித்து திடீரென பிரச்சினை என்றால் அதனை முறைப்படி முதலில் அதிகாரிகளிடம் மனு அளித்து தீர்வு காண வேண்டும். அதை விடுத்து இது போன்ற போராட்டத்தில் ஈடுபடுவது முறையல்ல என்று தெரிவித்தார்.

இதனை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்