சூளைமேட்டில் பரபரப்பு காணாமல்போன 3 மாணவிகளை திருநங்கை கடத்தியதாக புகார்
சென்னை சூளைமேட்டில் காணாமல் போன 3 மாணவிகளை, திருநங்கை கடத்திச் சென்றுவிட்டதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை சூளைமேடு, பத்மநாபா நகர், சிலம்பு தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர்களது மகள் சந்தியா. பிளஸ்-2 மாணவியான சந்தியா கடந்த 30-ந் தேதி முதல் திடீரென்று காணாமல் போய்விட்டார்.
அதே பகுதியைச்சேர்ந்த சவுமியா, தேவி என்ற மேலும் இரண்டு பிளஸ்-2 மாணவிகளும் சந்தியாவோடு சேர்ந்து மாயமாகிவிட்டனர். இவர்கள் 3 பேரும் தோழிகள். ஒரே பள்ளியில் படிப்பவர்கள். ஒன்றாக சேர்ந்து இவர்கள் வீட்டைவிட்டு வெளியேறி விட்டது தெரிய வந்தது.
இதுதொடர்பாக சந்தியாவின் தாயார் சுப்புலட்சுமி 31-ந் தேதி அன்று சூளைமேடு போலீசில் புகார் கொடுத்தார். தனது மகள் கடத்தப்பட்டுள்ளதாக அவர் புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.
திருநங்கை கடத்தியதாக புகார்
இதற்கிடையில், காணாமல் போன சந்தியா கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார். எனக்கு தெரிந்த அக்காள் ஒருவர், அமெரிக்காவில் வேலை வாங்கித் தருவதாக அழைத்தார். அவருடன் நான் சென்றுள்ளேன் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அக்காள் என்று சந்தியா குறிப்பிட்டு இருப்பது திருநங்கை என்று தெரிய வந்துள்ளது.
மாணவிகள் 3 பேரையும், அமெரிக்காவில் வேலை வாங்கித் தருவதாக ஆசைகாட்டி, திருநங்கை கடத்திச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. சூளைமேடு போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து மாணவிகள் 3 பேரையும் தேடிவருகிறார்கள்.