தேர்வில் தோல்வி அடைந்த 12–ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது
தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் 12–ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியது.
மும்பை,
தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் 12–ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியது.
தேர்வில் தோல்விமும்பை சயான்கோலிவாடா, பிரதிக்ஷாநகரில் உள்ள பஞ்சசீல் குடிசைப்பகுதியில் வசித்து வருபவர் தீபக் மோரே. இவரது மனைவி தீபாளி. இந்த தம்பதியின் மூத்த மகள் திப்தி(வயது 18). 12–ம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தார். நேற்று முன்தினம் வெளியான தேர்வு முடிவின் போது அவர் தோல்வி அடைந்தார்.
இதை அருகில் உள்ள கம்ப்யூட்டர் சென்டரில் பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவி திப்தி அழுது கொண்டே வீட்டிற்கு வந்தார்.
கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்ட அவர் வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை. வெளியில் விளையாடி கொண்டிருந்த தங்கை திருப்தி, தம்பி ஆர்யன் இருவரும் வந்து கதவை தட்டி பார்த்தனர். ஆனால் திப்தி கதவை திறக்கவில்லை. இதுபற்றி அவர்கள் அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தனர்.
மாணவி தற்கொலைசந்தேகம் அடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது திப்தி மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதை பார்த்து பதறி போன அவர்கள் வடலா டி.டி. போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். திப்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. முன்னதாக அவர் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது.
கடிதம் சிக்கியதுஅதில் ‘ குடும்பத்தின் கஷ்டத்தை உணர்ந்து நான் நன்றாக படித்தேன். தேர்ச்சி அடைந்து பெற்றோருக்கு உதவியாக இருப்பேன் என்று நினைத்தேன். தேர்வில் தோல்வி அடைந்ததை என்னால் நம்ப முடியவில்லை.
இனிமேல் வாழ எனக்கு இஷ்டம் இல்லை. எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. அம்மா, அப்பா என்னை மன்னித்து விடுங்கள் ’ என்று உருக்கமாக எழுதியிருந்தது.
தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.