கே.வி.குப்பம் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்
கே.வி.குப்பம் அருகே நாகல் கிராமத்தில் புதுமனை பகுதியில் கடந்த 29–ந் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் வசந்தா, சுகுணா, பஞ்சநாதன் ஆகியோரின் 3 குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாயின.
குடியாத்தம்,
கே.வி.குப்பம் அருகே நாகல் கிராமத்தில் புதுமனை பகுதியில் கடந்த 29–ந் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் வசந்தா, சுகுணா, பஞ்சநாதன் ஆகியோரின் 3 குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாயின.
இதனைத்தொடர்ந்து நேற்று தீ விபத்தால் பாதிக்கப்பட்ட 3 குடும்பத்தினருக்கு அரசின் நிவாரணமாக தலா ரூ.5 ஆயிரம் மற்றும் வேட்டி, சேலை உள்ளிட்ட பொருட்களை ஜி.லோகநாதன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
அப்போது தாசில்தார் நாகம்மாள், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கே.எம்.ஐ.சீனிவாசன், எஸ்.டி.ரகு, ரங்கநாதன், வருவாய் ஆய்வாளர் பலராமன் உள்பட பலர் உடனிருந்தனர்.