இறைச்சிக்கு மாடுகளை விற்க தடை: எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டம்

இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடைவிதித்துள்ளதை கண்டித்தும், மத்திய அரசின் இந்த உத்தரவை திரும்பபெற வலியுறுத்தியும் நேற்று வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடந்தது.

Update: 2017-05-31 22:45 GMT

வேலூர்,

இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடைவிதித்துள்ளதை கண்டித்தும், மத்திய அரசின் இந்த உத்தரவை திரும்பபெற வலியுறுத்தியும் நேற்று வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் முகமதுஆசாத் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட துணைத்தலைவர் சித்திக் வரவேற்றார். இதில் மாநில துணைத்தலைவர் அம்ஜத்பாஷா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

போராட்டத்தின்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள தடை உத்தரவு மத சுதந்திரத்திற்கும், விவசாயிகளுக்கும் எதிரானது. இந்த தடை உத்தரவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். இதில் தொகுதி தலைவர் நவ்ஷாத் மற்றும் மாட்டு இறைச்சி வியாபாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அபுபக்கர் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்