ரூ.8 லட்சம் மதிப்புள்ள 12 செம்மரக்கட்டைகள் பறிமுதல் ஜவ்வாதுமலையை சேர்ந்த 2 பேர் கைது

திருப்பதியை அடுத்த பாக்ராப்பேட்டை வனப்பகுதியில் செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் நேற்று அதிகாலை தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

Update: 2017-05-31 22:15 GMT

திருப்பதி,

திருப்பதியை அடுத்த பாக்ராப்பேட்டை வனப்பகுதியில் செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் நேற்று அதிகாலை தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது பாக்ராப்பேட்டையை அடுத்த கீடகூடுபண்டலு வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டிக் கொண்டிருந்த ஒரு கும்பல், போலீசாரை பார்த்ததும், கற்களை எடுத்து வீசி விட்டு, செம்மரங்களை அப்படியே போட்டு விட்டு தப்பி ஓடினர்.

போலீசார், அந்தக் கும்பலை விரட்டிச்சென்று மடக்கினர். அதில் 2 பேர் பிடிபட்டனர். மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர். பிடிபட்டவர்கள் தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையைச் சேர்ந்த மனோகரன், ராஜேந்திரன் என்று தெரிய வந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.8 லட்சம் மதிப்புள்ள 12 செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்