எங்கள் நோக்கத்திற்கு ஒத்துழைப்பு அளித்தால் இரு அணிகளும் இணைவதில் நிபந்தனைகள் இல்லை
எங்கள் நோக்கத்திற்கு ஒத்துழைப்பு அளித்தால் இரு அணிகளும் இணைவதில் நிபந்தனைகள் இல்லை ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
கம்பம்,
தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கம்பத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், கடந்த 45 ஆண்டுகளாக அ.தி.மு.க.வை தொண்டர்களுக்கான இயக்கமாகத்தான் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் பாதுகாத்து வந்தனர். எந்தவொரு தனிக்குடும்பத்தின் ஆதிக்கத்தின் கீழ் கட்சி சென்றுவிடக்கூடாது என்பது அவர்களின் நோக்கமாக இருந்தது.
அவர்களின் அந்த நோக்கத்தை பின்பற்றியே நானும் எனது ஆதரவாளர்களும் செயல்பட்டு வருகிறோம். மேலும் அ.தி.மு.க. எந்தவொரு குடும்பத்தின் கட்டுப்பாட்டிலும் சென்றுவிடக்கூடாது என்பதற்காகவே தர்மயுத்தத்தையும் தொடங்கினோம். எங்களின் நோக்கத்து சசிகலா அணியினர் ஒத்துழைப்பு அளிக்கும் பட்சத்தில் இரு அணிகளும் இணைவதில் எந்த நிபந்தனைகளும் இல்லை என்றார்.