மத்திய அரசை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்ததற்கு கண்டனம் தெரிவித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கம்பத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கம்பம்,
இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்ததற்கு கண்டனம் தெரிவித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கம்பத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் முஜிபுர் ரகுமான் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் ரபீக் அகமது கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தின் போது இறைச்சிக்காக மாடு விற்பதையும், அறுப்பதையும் தடை விதித்த மத்திய அரசை கண்டித்தும், தடை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், பாப்புலர் பிரண்ட் ஆப்இந்தியா மாநில செயற்குழு உறுப்பினர் இப்ராகிம் உஸ்மானி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.