ரகசிய வீடியோவை வெளியிடுவதாக தொழில் அதிபரிடம் ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டிய பெண், கள்ளக்காதலனுடன் கைது

ரகசிய வீடியோவை வெளியிடுவதாக தொழில் அதிபரிடம் ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டிய பெண், கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.

Update: 2017-05-31 23:15 GMT

செங்குன்றம்,

சென்னையை அடுத்த மாதவரத்தை சேர்ந்தவர் விஜயராஜ் (வயது 45). தொழில் அதிபரான இவரது அலுவலகத்தில் சென்னை கொளத்தூரை சேர்ந்த சுகன்யா (25) என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக வேலை செய்துவந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவருடைய கள்ளக்காதலன் பெரம்பூர், பெரவள்ளூரை சேர்ந்த பிரவீன்குமார் (40). இவர் திருமணம் ஆனவர்.

விஜயராஜ், சுகன்யா இருவரும் நட்புரீதியாக பழகியதாக கூறப்படுகிறது. இதனை ரகசியமாக செல்போனில் வீடியோவாக சுகன்யா படம்பிடித்தார். இதை பயன்படுத்தி 8 மாதங்கள் முன்பு சுகன்யாவும், பிரவீன்குமாரும் விஜயராஜை மிரட்டி உங்களுடைய வீடியோவை வெளியிடாமல் இருக்க எங்களுக்கு ரூ.50 லட்சம் கொடுக்க வேண்டும் என மிரட்டியுள்ளனர். விஜயராஜும் பயந்து ரூ.50 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

கள்ளக்காதலனுடன் கைது

கடந்த 2 நாட்களாக சுகன்யாவும், பிரவீன்குமாரும் மீண்டும் விஜயராஜிடம் ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டினர். இதுதொடர்பாக விஜயராஜ் மாதவரம் போலீசில் புகார் செய்தார்.

மாதவரம் துணை கமி‌ஷனர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில், உதவி கமி‌ஷனர் ஜெயசுப்பிரமணியன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் சுகன்யாவையும், பிரவீன்குமாரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். அவர்களிடம் இருந்து 150 பவுன் நகைகள், ரூ.10 லட்சம் பறிமுதல் செய்துள்ளதாக போலீஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்