பாளையங்கோட்டையில் மாட்டு இறைச்சி உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது
தமிழ் புலிகள் கட்சியின் நெல்லை மாவட்ட பிரிவு சார்பில் பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகே நேற்று மாட்டு இறைச்சி உண்ணும் போராட்டம் நடந்தது
நெல்லை,
தமிழ் புலிகள் கட்சியின் நெல்லை மாவட்ட பிரிவு சார்பில் பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகே நேற்று மாட்டு இறைச்சி உண்ணும் போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் தமிழ்மாறன் தலைமை தாங்கினார்.
கால்நடை சந்தைகளில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்கவும், வாங்கவும் கூடாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், மாட்டு இறைச்சிகளை சாப்பிட்டனர்.
இந்த போராட்டத்தில் தென்மண்டல துணை செயலாளர் தமிழரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து, அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியதாக 11 பேரை போலீசார் கைது செய்தனர்.