4ஜி சேவை விரைவில் தொடங்கப்படுகிறது பி.எஸ்.என்.எல். செல்போன் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள்
பி.எஸ்.என்.எல். செல்போன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளது எனவும், 4ஜி சேவை விரைவில் தொடங்கப்படும்.
நெல்லை,
பி.எஸ்.என்.எல். செல்போன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளது எனவும், 4ஜி சேவை விரைவில் தொடங்கப்படும் எனவும் நெல்லை மாவட்ட தொலை தொடர்பு பொது மேலாளர் முருகானந்தம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–
சிறப்பு சலுகைகள்தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு இணையாக பி.எஸ்.என்.எல். நிறுவனமும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளையும், புதிய திட்டங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது.
28 நாட்கள் வேலிடிட்டி உள்ள கோம்போ ரேட் கட்டர், பூஸ்டர், நெட் பேக், சிறப்பு கட்டண வவுச்சர்கள் (STV) ரூ.349 மூலம் தினமும் 2 ஜி.பி., 3ஜி டேட்டாவை பெறலாம். மேலும் அளவற்ற பி.எஸ்.என்.எல். நெட்வொர்க் கால்களும், மற்ற நெட்வொர்க் கால்களும் பேசி மகிழலாம்.
90 நாட்கள் வேலிடிட்டி உள்ள கோம்போ ரேட் கட்டர், பூஸ்டர், நெட்பேக், சிறப்பு கட்டண வவுச்சர்கள் ரூ.333 மூலம் தினமும் இலவசமாக 3 ஜி.பி., 3ஜி டேட்டா பெறலாம். அதேபோல் 71 நாட்கள் வேலிடிட்டியில் உள்ள கோம்போ ரேட்கட்டர், பூஸ்டர், நெட்பேக், சிறப்பு கட்டண வவுச்சர்கள் ரூ.395 மூலம் தினமும் இலவசமாக 2ஜி.பி., 3ஜி டேட்டா பெறலாம். அதற்கு மேல் இலவசமாக அளவற்ற 2ஜி டேட்டாவை பெறலாம்.
3 ஆயிரம் நிமிடங்கள்மேலும் இலவசமாக 3 ஆயிரம் நிமிடங்கள் பி.எஸ்.என்.எல். நெட்வொர்க் கால்களும் மற்றும் 1,800 நிமிடங்கள் மற்ற நெட்வொர்க் கால்களும் பேசலாம். இலவச நிமிடங்களுக்கு மேல் பேசும் கால்களுக்கு நிமிடத்துக்கு 20 பைசா வீதம் கட்டணம் வசூல் செய்யப்படும்.
28 நாட்கள் வேலிடிட்டி உள்ள கோம்போ ரேட்கட்டர், பூஸ்டர், நெட்பேக், சிறப்பு கட்டண வவுச்சர்கள் ரூ.339 மூலம் தினமும் இலவசமாக 3ஜி.பி., 3ஜி டேட்டா பெறலாம். மேலும் இலவசமாக அளவற்ற பி.எஸ்.என்.எல். கால்கள் பேசலாம். மற்ற நெட்வொர்க் கால்களுக்கு 25 நிமிடங்கள் பேசலாம். இலவச நிமிடங்களுக்கு மேல் பேசும் மற்ற நெட்வொர்க் கால்களுக்கு நிமிடத்துக்கு 25 பைசா வசூல் செய்யப்படும்.
ஒரு வருட வேலிடிட்டியுடன் கூடிய ரேட்கட்டர், பூஸ்டர், நெட்பேக், சிறப்பு கட்டண வவுச்சர்கள் ரூ.4,498 மூலம் 80 ஜி.பி. டேட்டாவை பெறலாம். ரூ.3,998 மூலம் 60 ஜி.பி, டேட்டாவும், ரூ.2,798 மூலம் 36 ஜி.பி. டேட்டாவும், ரூ.1,498 மூலம் 18 ஜி.பி. டேட்டாவும் பெறலாம்.
முழு டாக்டைம்2 நாட்கள் வேலிடிட்டியுடன் கூடிய ரேட்கட்டர், பூஸ்டர், நெட்பேக், சிறப்பு கட்டண வவுச்சர்கள் ரூ.13 மூலம் ரூ.15 டாக்டைம் மற்றும் 15 எம்.பி. இலவச டேட்டாவும் பெறலாம். 10 நாட்கள் வேலிடிட்டியுடன் கூடிய ரேட்கட்டர், பூஸ்டர், நெட்பேக், சிறப்பு கட்டண வவுச்சர்கள் ரூ.77 மூலம் ரூ.80 டாக்டைம் பெறலாம். 40 எம்.பி. இலவச டேட்டாவும் வழங்கப்படுகிறது. 15 நாட்கள் வேலிடிட்டிக்கு ரூ.177 மூலம் ரூ.180 டாக்டைம் மற்றம் 60 எம்.பி. இலவச டேட்டா பெறலாம்.
தற்போது பி.எஸ்.என்.எல். ஆதார் எண் மூலம் புதிய சிம் ஆக்டிவேசனை செய்து வருகிறது. 15 நிமிடங்களில் செல்போன் எண்ணை ஆக்டிவேட் செய்யலாம். நெல்லை மாவட்டத்தை பொறுத்த வரையில் 5 ஆயிரம் பி.எஸ்.எல்.என். கோபுரங்கள் உள்ளன. தற்போது 4ஜி சேவை விரிவுபடுத்தப்படுகிறது. இந்த சேவையை அறிமுகப்படுத்துவதற்காக இந்த ஆண்டில் தமிழகம் முழுவதும் 600 புதிய செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன. நெல்லை மாவட்டத்திலும் புதிய கோபுரம் அமைக்கப்படும். அதன்பிறகு 4ஜி சேவை தொடங்கும்.
கோடைகால சிறப்பு பயிற்சிகோடைகால விடுமுறையில் என்ஜினீயரிங் மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு நெல்லையில் உள்ள பொது மேலாளர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் தொலைபேசி இணைப்பிலும் புதிய சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு முருகானந்தம் கூறினார்.
அப்போது. பி.எஸ்.என்.எல். துணை பொதுமேலாளர்கள் ராஜேசுவரி (நிர்வாகம்), சேகர் (நிதி) மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.