மத்திய அரசை கண்டித்து பாளையங்கோட்டை, மேலப்பாளையத்தில் வருகிற 5–ந்தேதி ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து வருகிற 5–ந்தேதி (திங்கட்கிழமை) பாளையங்கோட்டை, மேலப்பாளையத்தில் ஆர்ப்பாட்டம்.
நெல்லை,
மத்திய அரசை கண்டித்து வருகிற 5–ந்தேதி (திங்கட்கிழமை) பாளையங்கோட்டை, மேலப்பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று நெல்லையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டம்நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார்.
தி.மு.க. மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப், காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் ராம்நாத், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் காசிவிசுவநாதன், மாநகர செயலாளர் லெட்சுமணன், ம.தி.மு.க. மாநகர மாவட்ட செயலாளர் நிஜாம், தே.மு.தி.க. மாநகர மாவட்ட செயலாளர் முகமது அலி, மனித நேய மக்கள் கட்சி மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் உஸ்மான்காந், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில துணைத்தலைவர் நெல்லை முபாரக், மறுமலர்ச்சி த.மு.மு.க. ரசூல்மைதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி கரிசல் சுரேஷ், த.ம.ஜ.க. அப்துல் ஜப்பார், மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி சங்கர பாண்டியன், ஆதித்தமிழர் கட்சி கதிரவன், ஆதித்தமிழர் பேரவை கலைக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம்கூட்டத்தில் மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை உத்தரவு உணவு உரிமை மீதான தாக்குதல் ஆகும். இதை கண்டித்து வருகிற 5–ந்தேதி (திங்கட்கிழமை) மேலப்பாளையத்திலும், 9–ந்தேதி (வெள்ளிக்கிழமை) பாளையங்கோட்டையிலும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். இதில் மதசார்ப்பற்ற கட்சிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.