பார்வையற்றவர்கள் கல்விக்கு உதவும் புதிய கருவி
கண் பார்வை இல்லாதவர்கள் மற்றும் பார்வைக் குறைபாடு கொண்டவர்களின் தகவல் தொடர்புக்காக அறிஞர் பிரெய்லி, சிறப்பு எழுத்துகளை உருவாக்கினார்.
கண் பார்வை இல்லாதவர்கள் மற்றும் பார்வைக் குறைபாடு கொண்டவர்களின் தகவல் தொடர்புக்காக அறிஞர் பிரெய்லி, சிறப்பு எழுத்துகளை உருவாக்கினார். பிரெய்லி எழுத்துகள் உருவாக்கப்பட்டு சுமார் 200 ஆண்டுகளில் பார்வையற்றவர்களின் திறன் பலமடங்கு அதிகரித்துள்ளது. ஆனாலும் சமீப காலங்களில் பிரெய்லி பயன்பாடு குறைந்துள்ளது.
கணினி தொழில்நுட்ப வளர்ச்சியால் பெரும்பாலான விஷயங்கள் கணினிமயமாகி விட்டது பிரெய்லி பயன்பாடு குறைந்ததற்கு ஒரு காரணமாகும். பிரெய்லியை கற்பிக்கும் கணினி தொழில்நுட்பம் வெகுவாக வளரவில்லை. இந்தக் குறையை போக்கும் வகையில் யாருடைய உதவியும் இல்லாமல் பிரெய்லி எழுத்துகளை படிக்க உதவும் சிறப்பு எலக்ட்ரானிக் பலகையை அமெரிக்காவின் ‘ஹார்வர்டு இன்னோவேசன்ஸ்’ ஆய்வக விஞ்ஞானிகள், தயாரித்துள்ளனர். ‘த ரீட்ரீட்’ என்பது இதன் பெயர்.
விரித்து வைக்கக்கூடிய சிறு பெட்டியாக உள்ள இந்த பலகையில், ஆங்கில எழுத்துகள் மற்றும் பிரெய்லி எழுத்துகள் அடங்கிய சிறிய எலக்ட்ரானிக் அட்டைகள் உள்ளன. மேலும் ஆங்கிலத்தில் வழக்கமாக பிற்சேர்க்கையாக பயன்படுத்தப்படும், ed, es. ing போன்ற குறி சொற்களும் இருக்கின்றன.
ஒவ்வொரு எழுத்துகளையும் தொடும்போது அதில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒலி உச்சரிப்பை கேட்க முடியும். இந்த எழுத்துகளை வரிசையாக அடுக்கி வைத்து அவற்றை தொடர்ச்சியாக தொடும்போது வார்த்தையாக உச்சரிக்கிறது இந்தக் கருவி. இதனால் கற்றுக் கொடுக்க யாரும் தேவையில்லாமலே ஆரம்ப கால பிரெய்லி கல்வியை பெற்றுவிட முடியும்.
அங்குள்ள பார்வையற்றோர் பள்ளியில் 3 மாத காலம் மாணவர்களுக்கு இந்த பலகை மூலமாக கல்வி வழங்கியதில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டதாக ஆய்வாளர்களும், பள்ளி ஆசிரியர்களும் கூறி உள்ளனர். கிக்ஸ்டார்ட்டர் நிறுவனம், இதை தயாரித்து விற்பனை செய்ய உள்ளது. இதன் விலை 495 அமெரிக்க டாலர்கள்.