தளி அருகே திருமூர்த்தி அணையில் மூழ்கி அக்காள், தங்கை பரிதாப சாவு
தளி அருகே திருமூர்த்தி அணையில் மூழ்கி அக்காள், தங்கை பரிதாபமாக இறந்தனர்.
தளி
திருப்பூர் மாவட்டம் உடுமலை சிவசக்தி காலனியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். கார் டிரைவர். இவருடைய மகள்கள் கல்பனா(வயது 24), ரூபா(20). கல்பனா உடுமலையில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பில். படித்துவந்தார். ரூபா அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்சி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் அக்காள், தங்கை இருவரும் நேற்று உடுமலை எஸ்.என்.ஆர். லே-அவுட்டை சேர்ந்த முருகேசனின் மகள் தீபிகா(20) மற்றும் தாராபுரத்தை சேர்ந்த குமாரின் மகள் கஜலட்சுமி (13) ஆகியோருடன் திருமூர்த்திமலை கோவிலுக்கு சாமிதரிசனம் செய்ய சென்றனர். கோவிலுக்கு சென்றுவிட்டு, 4 பேரும் திருமூர்த்தி அணைப்பகுதிக்கு சென்று அங்குள்ள தண்ணீரில் இறங்கி குளித்துள்ளனர்.
அணையில் மூழ்கி சாவு
அப்போது எதிர்பாராத விதமாக கல்பனா மற்றும் ரூபா ஆகியோர் அணையில் உள்ள சேற்றில் சிக்கிக்கொண்டதாக தெரிகிறது. உடனே தீபிகாவும், கஜலட்சுமியும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவர்கள் இருவரையும் காப்பற்ற முயன்றுள்ளனர். இதில் அவர்களும் சேற்றில் சிக்கிக்கொண்டனர்.
இதனால், அவர்கள் 4 பேரும் ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என்று சத்தம் எழுப்பினார்கள். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அணையில் சிக்கிக்கொண்ட மாணவிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் கல்பனாவும், ரூபாவும் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டனர். தீபிகா, கஜலட்சுமி ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
உடல்கள் மீட்பு
இதுபற்றி தகவல் அறிந்த தளி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் அணையில் மூழ்கி இறந்த கல்பனா, ரூபா ஆகியோரின் உடல்களை மீட்டனர். பின்னர் இருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
இதுகுறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்காள், தங்கை இருவரும் அணையில் மூழ்கி இறந்த சம்பவம் உடுமலை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.