மக்களை அலைக்கழிக்க கூடாது சென்னை போலீசாருக்கு கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் 11 அறிவுரைகள்
பெண் போலீசார் தான் பெண்களிடம் விசாரிக்க வேண்டும்.
சென்னை,
காவல் நிலைய எல்லையை காரணம் காட்டி மக்களை அலைக்கழிக்கக் கூடாது என்பது உள்பட 11 அறிவுரைகளை சென்னை போலீசாருக்கு கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் வழங்கி உள்ளார்.
அணிவகுப்பு நிகழ்ச்சி
போலீசார், பொதுமக்கள் இடையே இணக்கமான நல்லுறவை மேம்படுத்தும் வகையில் சென்னையில் 12 இடங்களில் போலீசார் அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் துணை, இணை போலீஸ் கமிஷனர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி சென்னையில் நேற்று 12 இடங்களில் போலீசார் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கலந்துகொண்டு போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதில், பஞ்சாப் மாநில முன்னாள் டி.ஜி.பி. கே.பி.எஸ்.கில் மறைவுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
காவல்நிலைய எல்லை
நிகழ்ச்சியில் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் சென்னை நகர போலீசார் சிறப்பாக பணியாற்ற 11 அறிவுரைகள் வழங்கினார். அதன் விவரம் வருமாறு:-
* நம்மை பிறர் எவ்வாறு மரியாதையாக நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அதுபோல போலீஸ் நிலையத்துக்கு வருபவர்களிடம் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும்.
* புகாரின் தன்மைக்கு ஏற்ப மனு ரசீது(சி.எஸ்.ஆர்.) முதல் தகவல் அறிக்கை(எப்.ஐ.ஆர்.) வழங்கி விசாரிக்க வேண்டும்.
* காவல் நிலைய எல்லையை காரணம் காட்டி மக்களை அலைக்கழிக்கக் கூடாது.
* பெண்களை பெண் போலீஸ் அதிகாரிகள் மூலமே விசாரிக்க வேண்டும்.
போலீசார் நண்பன்
* வாகன தணிக்கையின்போது கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும்.
விதிமுறைகளை மீறுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* போக்குவரத்து விதிகள் அனைவருக்கும் ஒன்று தான். எனவே போலீசார் கட்டாயம் ஹெல்மட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும்.
* போலீசார் மிடுக்காக சீருடை அணிய வேண்டும்.
* அனைவரும் உடல் தகுதியை பணிக்காலம் முழுவதும் பராமரிக்க வேண்டும். வருடாந்திர உடல் பரிசோதனையை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.
* ஓய்வு நேரத்தில் குடும்பம், குழந்தைகளின் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்.
* போலீசார் பொதுமக்களின் நண்பன் என்ற வார்த்தையை உண்மையாக்க அனைவரும் பாடுபட வேண்டும்.
* பொதுமக்களை போன்று போலீஸ்நிலையத்துக்கு வரும் வக்கீல்கள், பத்திரிகையாளர்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும்.
மேற்கண்ட அறிவுரைகளை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் வழங்கினார்.
5 ஆயிரம் போலீசார்
இந்த நிகழ்ச்சியில், சென்னை போலீஸ் கூடுதல் கமிஷனர்கள் எஸ்.என்.சேஷாயி(தலைமையிடம்), எம்.டி.கணேசமூர்த்தி (மத்திய குற்றப்பிரிவு), துணை கமிஷனர் எஸ்.சரவணன் (தலைமையிடம்), ஆயுதப்படை துணை கமிஷனர்கள் சவுந்தரராஜன், ஜெயகுமார், ரவிச்சந்திரன்(மோட்டார் வாகனப்பிரிவு) உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
சென்னையில் 12 இடங்களில் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற அணிவகுப்பு நிகழ்ச்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் கலந்துகொண்டனர்.