பள்ளி வாகனங்கள் ஆய்வு 46 வாகனங்கள் தகுதி நீக்கம்
வாணியம்பாடி வட்டார போக்குவரத்து சார்பில் பள்ளி வாகனங்கள் தரம் குறித்து ஆய்வு நடந்தது.
வாணியம்பாடி,
வாணியம்பாடி வட்டார போக்குவரத்து சார்பில் பள்ளி வாகனங்கள் தரம் குறித்து ஆய்வு நடந்தது. இதில் வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர், ஆலங்காயம், நாட்டறம்பள்ளி, ஏலகிரி பகுதியில் உள்ள பள்ளிகளின் வாகனங்கள் ஆய்வுக்காக கொண்டு வரப்பட்டது. திருப்பத்தூர் உதவி கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில், வாணியம்பாடி போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தரம், வட்டார போக்குவரத்து அலுவலர் மோகன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் குலோத்துங்கன், குணசேகரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது 46 வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது.