பா.ஜ.க.வின் பகல் கனவு பலிக்காது முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆவேசம்
தமிழகம், புதுச்சேரியில் ஆட்சியை பிடித்து விடலாம் என்ற பா.ஜ.க.வின் பகல் கனவு பலிக்காது என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி ஆவேசமாக கூறினார்.;
புதுச்சேரி,
புதுவை மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ராஜீவ்காந்தியின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
கிராம முன்னேற்றத்தில் நாட்டம்
தொடக்கத்தில் ராஜீவ்காந்தி அரசியலில் நாட்டம் இல்லாமல் இருந்து வந்தார். அதன்பின் இந்திராகாந்தியின் மறைவுக்குப் பிறகு அவரை காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் அரசியலுக்கு அழைத்து வந்தனர். அதன்பின் அனைத்து தரப்பினரும் பிரதமராக ஏற்றுக்கொள்ளக் கூடியவராக திகழ்ந்தார். கிராம முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என்பதை கருத்தில் கொண்டு பஞ்சாயத்துராஜ் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தினார். இதன் மூலம் கிராமங்களின் முன்னேற்றத்துக்கு வித்திட்டவர். எந்த பிரச்சினையாக இருந்தாலும் உடனுக்குடன் முடிவு எடுப்பார். அதை தைரியமாக செயல்படுத்துவார்.
எதிர்கால திட்டங்களை கணித்து செயல்பட்டு வந்தார். இந்தியாவை கம்ப்யூட்டர் மயமாக்கிய பெருமை ராஜீவ்காந்தியையே சாரும். ஆனால் கம்ப்யூட்டர் கொண்டு வரப்படுவதால் வேலைவாய்ப்பு பறிபோய்விடும் என்றெல்லாம் அப்போது சொன்னார்கள். ஆனால் தகவல் தொழில்நுட்ப துறை மூலம் தான் அதிக வருமானமே கிடைக்கிறது.
பழிவாங்கும் போக்கு
இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் செல்வாக்குமிக்கவராக ராஜீவ் காந்தி உயர்ந்தார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதியின் விருந்தினராக தங்கி இருந்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர். இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் அவர்களே ஆட்சி நடத்த வேண்டும் என்பதில் விருப்பம் கொண்டவராக இருந்தார். ஆனால் அவரது எண்ணத்தை புரிந்துகொள்ளாமல் தீவிரவாதத்தை ஏவி அவரை கொன்றுவிட்டனர். ராஜீவ்காந்தி இருந்து இருந்தால் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்டு இந்தியா வல்லரசாகி இருக்கும்.
காங்கிரஸ் கட்சிக்கு இது சோதனையான காலம். மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாரதீய ஜனதா திட்டமிட்டு எதிர்க்கட்சி தலைவர்களை பழிவாங்குகிறது. சி.பி.ஐ., வருமான வரித்துறை ஆகியவற்றை ஏவிவிடுகிறது. முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை வருமான வரி சோதனை நடத்துகின்றனர்.
பாராளுமன்றத்தில் பா.ஜ.க.வை எதிர்த்து பேசியதாலேயே இதுபோன்ற நடவடிக்கைகளை ஏவி விடுகிறார்கள். எந்த குற்ற நடவடிக்கையிலும் ஈடுபடாதபோது பழிவாங்கும் நோக்கில் பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. இது ரொம்ப காலம் நீடிக்காது.
பா.ஜ.க.வின் பகல் கனவு பலிக்காது
இதுபோன்றவற்றை சமாளிக்கும் திறமை காங்கிரஸ் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் உள்ளது. தியாகம் செய்து வளர்ந்த கட்சி காங்கிரஸ். எனவே இந்த கட்சியை எந்த கொம்பனாலும் ஒன்றும் செய்யமுடியாது. எப்போதும் மாயை நிலைக்காது. மக்கள் சேவைதான் நிலைக்கும். வறட்சியால் பாதிக்கப்பட்டு கிடக்கும் தமிழகம், புதுச்சேரி மாநில விவசாயிகளுக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்கவில்லை.
மீனவர்களின் பிரச்சினை காலங்காலமாக தொடர்கதையாக இருந்து வருகிறது. அதை தீர்க்கவில்லை. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்தவில்லை. இதில் எதையும் செய்யாமல் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று கணக்கு போடுகிறார்கள். பா.ஜ.க.வின் இந்த பகல் கனவு நிறைவேறாது. தமிழம், புதுச்சேரியில் ஆட்சியை பிடிக்க நினைக்கும் பாரதீய ஜனதாவின் எண்ணம் பலிக்காது.
கட்-அவுட் வேண்டாம்
புதுவையில் எத்தகைய சூழ்நிலையில் நாங்கள் எப்படி ஆட்சி செய்து வருகிறோம் என்பது உங்களுக்கு நன்கு தெரியும். இப்போது தெருத்தெருவாக கட்அவுட் வைத்துள்ளார்கள், தலைவர்களின் சிலைகளையும் சில இடங் களில் மறைத்து வைத்துள்ளார்கள். எனது பிறந்தநாளுக்கு யாரும் கட்-அவுட் வைக்கவேண்டாம். அதற்கான பணத்தை முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு தாருங்கள்.
அதன்மூலம் எத்தனையோ ஏழைகள் பயனடைவார்கள். கட்-அவுட்டுகளை நான் பார்ப்பதும் கிடையாது. கட்அவுட் வைப்பவர்கள்தான் எனக்கு முதல் எதிரி. முன்பு இருந்தவர்கள் எல்லாம் கட்-அவுட்டுகளை இரவில் பார்த்துவிட்டு மறுநாள் கட்-அவுட் வைத்தவர்களுக்கு வாரிய தலைவர் பதவி கொடுத்தார்கள். ஆனால் நான் அப்படி அல்ல.
தற்போது வைக்கப்பட்டுள்ள கட்-அவுட்டுகளை எடுக்க பொதுப்பணித்துறை அமைச்சர் உத்தரவிடவேண்டும். கட்-அவுட் வைக்காமல் எனக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள்.
இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.
அமைச்சர் நமச்சிவாயம்
அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-
காங்கிரஸ் கட்சியில் தற்போது உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்த உறுப்பினர் சேர்க்கையை நாம் கடந்த 15-ந்தேதிக்கு முன்பே முடித்து இருக்கவேண்டும். ஆனால் இப்போது வருகிற 30-ந்தேதிவரை காலநீட்டிப்பு கேட்டு பெற்றுள்ளோம். அதுவரை நிர்வாகிகள் காத்து இருக்கக் கூடாது. 25-ந்தேதிக்குள் உறுப்பினர் படிவங் களை கொடுத்துவிடுங்கள்.
அதை கம்ப்யூட்டரில் ஏற்றவேண்டும். உறுப்பினர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. போலி உறுப்பினர்கள் என்பதே நமது கட்சியில் இருக்கக் கூடாது. ஒரு தொகுதிக்கு குறைந்தது 5 ஆயிரம் பேரையாவது கட்சி உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.