ஓட, ஓட விரட்டி காவலாளியை மிதித்து கொன்ற காட்டு யானை
கீரிப்பாறை எஸ்டேட் பகுதியில் அதிகாலையில் ஓட, ஓட விரட்டி காவலாளியை காட்டு யானை மிதித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அழகியபாண்டியபுரம்,
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே கீரிப்பாறை வனப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட எஸ்டேட்கள் உள்ளன. அங்கு ரப்பர், கிராம்பு, வாழை, தென்னை, கமுகு போன்றவை பயிர் செய்யப்படுகின்றன.
மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள இந்த எஸ்டேட் பகுதிகளிலும், ரப்பர் தோட்டங்களிலும் காட்டு யானைகள் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன. மலைப்பகுதிகளில் வசிப்பவர்களும், எஸ்டேட் பகுதிகளில் வேலை செய்து வருகிறவர்களும் வனவிலங்குகளால் தாக்கப்படும் நிகழ்வுகளும் நடக்கின்றன.
இந்தநிலையில் மறாமலை வனப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான கிராம்பு எஸ்டேட்டில் தொழிலாளர்கள் தங்கி இருந்து கிராம்பு பறித்து வருகிறார்கள். சிதறால் பள்ளிக்கோணம் பகுதியைச் சேர்ந்த ராஜலிங்கம் (வயது 68) என்பவர் அந்த எஸ்டேட்டில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இவர் நேற்று அதிகாலை 6 மணிக்கு அந்த பகுதியில் உள்ள ஓடை அருகே சென்று கொண்டிருந்தார்.
மிதித்து கொன்ற யானை
அப்போது ஒரு காட்டுயானை திடீரென்று அந்த பகுதியில் வந்தது. யானையை பார்த்ததும் ராஜலிங்கம் அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தார். ஆனால் சற்று தூரம் யானை அவரை விரட்டிச் சென்றது.
துதிக்கையால் ராஜலிங்கத்தை தூக்கி வீசி அவரை காலால் மிதித்தது. இதில் படுகாயம் அடைந்த ராஜலிங்கம் அலறினார். அந்த சத்தம் கேட்டதும் எஸ்டேட் தொழிலாளர்கள் சிலர் அங்கு ஓடிவந்தனர். ஆட்கள் வருவதை பார்த்ததும் காட்டு யானை அடர்ந்த வனப்பகுதியை நோக்கி ஓடியது.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராஜலிங்கத்தை மற்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தடிக்காரன்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் கீரிப்பாறை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். ராஜலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைகாக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வனத்துறையினருக்கு கோரிக்கை
இதுதொடர்பாக எஸ்டேட்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கூறும் போது “மலைப்பகுதியில் உள்ள குடியிருப்புகள், விளை நிலங்களுக்குள் வனவிலங்குகள் அவ்வப்போது புகுந்து விடுகின்றன. காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளால் எங்களுக்கு அச்சுறுத்தல் இருந்து வருகிறது. தற்போது காட்டு யானை, எஸ்டேட் காவலாளியை மிதித்து கொன்றுவிட்டது. எனவே மக்கள் வசிக்கும் இடங்களுக்குள் வனவிலங்குகள் வருவதை தடுக்க வனத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
எஸ்டேட் காவலாளியை காட்டு யானை மிதித்துக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.