ரூ.3 கோடி பழைய நோட்டுகள் பறிமுதல் வங்கி பெண் ஊழியர் உள்பட 11 பேர் கைது
இருவேறு இடங்களில் காரில் கொண்டுவரப்பட்ட ரூ.3 கோடி பழைய நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தானே,
இருவேறு இடங்களில் காரில் கொண்டுவரப்பட்ட ரூ.3 கோடி பழைய நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக தனியார் வங்கி பெண் ஊழியர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
பழைய ரூபாய் நோட்டுகள்
ராய்காட் மாவட்டம் சுதாகாட் பகுதியில் பாலி- கொப்போலி ரோட்டில் ஒரு கும்பல் அதிகளவில் பழைய ரூபாய் நோட்டுகளுடன் வர உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாலி போலீசார் நேற்று முன்தினம் மாலை பாலி- கொப்போலி ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை வழிமறித்து நிறுத்தி சோதனையிட்டனர்.
இந்த சோதனையில் காரில் இருந்து கத்தை, கத்தையாக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் காரில் சிக்கிய பழைய ரூபாய் நோட்டுகளை எண்ணிய போது அதில் ரூ.2 கோடியே 19 லட்சத்து 65 ஆயிரம் இருந்தது. பழைய நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக காரில் இருந்த 8 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்களுக்கு பழைய நோட்டுகள் எங்கிருந்து வந்தது, அதை எங்கு கொண்டு செல்கிறார்கள் என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தானேயில்...
தானே மும்ரா பகுதியில் காரில் சட்டவிரோதமாக பழைய ரூபாய் நோட்டுகள் கொண்டு வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் மும்ரா டவுன்சிப் அருகே பார்சி சந்திப்பில் நேற்று முன்தினம் இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்த சோதனையின் போது அந்த வழியாக வேகமாக வந்த காரை போலீசார் வழிமறித்து நிறுத்தி காரில் இருந்த பெண் உள்பட 3 பேரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் போலீசாரின் கேள்விகளுக்கு முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காருக்குள் சோதனையிட்டனர்.
வங்கி பெண் ஊழியர்
இந்த சோதனையில் காருக்குள் ரூ.500, ரூ.1000 பழைய நோட்டுகள் கத்தை, கத்தையாக இருந்தன. இதனையடுத்து அந்த ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.1 கோடி ஆகும். மேலும் காரில் இருந்த பெண் உள்பட 3 பேரை கைது செய்தனர்.
கைதானவர்கள் மும்பையை சேர்ந்த சந்தீப் ராமச்சந்திரா(வயது49), தானே மாவட்டம் மிரா ரோட்டை சேர்ந்தவர்களான அதுல் தேவிசந்திரன் சிங்(34), சோனல் (24) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதில் சோனல் தனியார் வங்கி பெண் ஊழியர் ஆவர். இவர்கள் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் வந்த காரையும் பறிமுதல் செய்து, சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.