வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய வழக்கில் 2 பேர் கைது

சோழிங்கநல்லூர் கே.கே.சாலை சுங்கச்சாவடி அருகே செம்மஞ்சேரி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

Update: 2017-05-18 21:49 GMT
சோழிங்கநல்லூர்,

சோழிங்கநல்லூர் கே.கே.சாலை சுங்கச்சாவடி அருகே செம்மஞ்சேரி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். மேலும் அவர்கள் இருவரும் சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 45) என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை திருடியது தெரியவந்தது. அதன் பேரில் இருவரையும் போலீசார் கைது செய்து செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில் பிடிபட்டவர்கள் சென்னை மண்ணடியை சேர்ந்த மணி (33) செம்மஞ்சேரியை சேர்ந்த ராஜா (33) என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 20½ பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மணி மீது கொலை வழக்கு உள்பட 10 வழக்குகள் உள்ளது. ராஜா மீது சேலையூர், ஜாம்பஜார் போலீஸ்நிலையங்களில் வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய வழக்குகள் உள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்