நாடகம் பார்க்கச் சென்ற விவசாயி மர்மச்சாவு வீடியோ பதிவுடன் பிரேத பரிசோதனை
திருவாடானை அருகே முதியவர் சாவில் மர்மம் இருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் முன்பு வீடியோ பதிவுடன் பிரேத பரிசோதனை நடைபெற்றது.
தொண்டி,
திருவாடானை தாலுகா டி.நாகனி கிராமத்தை சேர்ந்தவர் சங்கையா (வயது 70), விவசாயி. இவர் அந்த கிராமத்தில் நடைபெற்ற அய்யனார் கோவில் திருவிழாவையொட்டி நடந்த நாடகத்தை பார்க்க சென்றுள்ளார். இந்த நிலையில் நாடக கொட்டகை அருகே சங்கையா பிணமாக கிடந்தார். அதனை பார்த்த அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் இதுகுறித்து கோவையில் ஓட்டல் தொழில் செய்து வரும் அவருடைய மகன் அழகர்சாமிக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அவர் சொந்த ஊரான டி.நாகனி கிராமத்திற்கு வந்து அவருடைய தந்தையின் உடலை பார்த்து, அவர் சாவில் மர்மம் இருப்பதாக திருவாடானை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமணி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சங்கையாவின் உடலை கைப்பற்றி திருவாடானை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பதற்ற நிலை
இந்த நிலையில் சங்கையாவின் உறவினர்கள் நேற்று காலை மருத்துவமனை முன்பு குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றநிலை உருவானதையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சங்கையாவின் மகன் அழகர்சாமி மற்றும் உறவினர்கள் சங்கையா முன் விரோதம் காரணமாகவே அடித்து கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், கொலை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவேண்டும்.
இந்த சம்பவம் நடைபெற்றபோது நாடக பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசார் இதுபற்றிய உண்மையை காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கவில்லை என்று கூறி போலீஸ் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், சங்கையாவின் பிரேத பரிசோதனையை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும், இதற்கு திருவாடானை அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாததால் ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேதத்தை கொண்டு செல்ல வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.
பிரேத பரிசோதனை
அதனை தொடர்ந்து திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து திருவாடானை அரசு மருத்துவமனையிலேயே அவருடைய உடல் பிரேத பரிசோதனை வீடியோ பதிவுடன் நடைபெற்றது. இந்தநிலையில் திருவாடானை போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இதுபற்றி சங்கையாவின் உறவினர்கள் சார்பில் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும், அரசுக்கும் புகார் மனுக்கள் அனுப்பப்பட்டுஉள்ளது.