ஊழல் வழக்கில் அடைக்கப்பட்ட முன்னாள் மந்திரி சகன் புஜ்பாலுக்கு சிறையில் சலுகைகள்
மகாராஷ்டிரா சதன் ஊழல் வழக்கு தொடர்பாக முன்னாள் பொதுப்பணித்துறை மந்திரி சகன் புஜ்பால் கடந்த ஆண்டு அமலாக்க பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
ஊழல் வழக்கில் அடைக்கப்பட்ட முன்னாள் மந்திரி சகன் புஜ்பால் மற்றும் அவரது உறவினர் சமீர் புஜ்பாலுக்கு சிறையில் சலுகைகள் வழங்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சகன் புஜ்பால்
மகாராஷ்டிரா சதன் ஊழல் வழக்கு தொடர்பாக முன்னாள் பொதுப்பணித்துறை மந்திரி சகன் புஜ்பால், அவரது நெருங்கிய உறவினர் சமீர் புஜ்பால் ஆகியோர் கடந்த ஆண்டு அமலாக்க பிரிவினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். தற்போது இருவரும் மும்பை ஆர்தர்ரோடு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சிறையில் விதிமுறைகளை மீறி அதிக சலுகைகள் அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
இதுபற்றி சமூக ஆர்வலர் அஞ்சலி தமானியா சிறைத்துறை கூடுதல் இயக்குனர் ஜெனரல் புஷன்குமார் உபாத்யாயாவிடம் புகார் மனு ஒன்றை கொடுத்து இருக்கிறார்.
விசாரணைக்கு உத்தரவு
அதில், ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் முன்னாள் மந்திரி சகன் புஜ்பால், அவரது உறவினர் சமீர் புஜ்பால் இருவருக்கும் வீட்டில் இருந்து சமைத்து கொண்டு வந்து அசைவ உணவு வழங்கப்பட்டு வருகிறது. பழவகைகளும் கொடுக்கப்படுகிறது. மேலும் இருவரது சிறை அறையிலும் அவர்கள் பார்ப்பதற்கு டி.வி. வைக்கப்பட்டுள்ளது. இருவரும் செல்போனில் பேச அனுமதிக்கப்படுகிறார்கள். இது சிறை விதிமுறைகளுக்கு எதிரானது என தெரிவித்து இருக்கிறார்.
இது தொடர்பாக சிறைத்துறை கூடுதல் இயக்குனர் ஜெனரல் புஷன்குமார் உபாத்யாயாவிடம் கேட்டதற்கு, ‘அஞ்சலி தமானியா தெரிவித்து உள்ள புகார் குறித்து விசாரணை நடத்துவதற்கு சிறைத்துறை டி.ஐ.ஜி.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றார்.