காவிரி உரிமை மீட்புக்குழுவினர் 3-வது நாளாக ரெயில் மறியல் 36 பேர் கைது
ஒற்றை தீர்ப்பாய மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சை அருகே காவிரி உரிமை மீட்புக்குழுவினர் 3-வது நாளாக ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக திரைப்பட இயக்குனர் கவுதமன் உள்பட 36 பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர்,
காவிரி தீர்ப்பாயத்தை கலைத்து அதன் இறுதித் தீர்ப்பை ரத்து செய்யும் வகையில் மத்தியமந்திரி உமாபாரதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஒற்றை தீர்ப்பாய சட்ட முன்வடிவை திரும்ப பெற வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறைக்குழுவை உடனே அமைக்க வேண்டும். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகஅரசு புதிய அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். கூட்டுறவு மற்றும் தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்ற அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் 7 நாட்கள் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி முதல்நாள் தஞ்சை மாவட்டத்தில் அய்யனாபுரம், ஆலக்குடி, திருவிடைமருதூர், தஞ்சை ஆகிய இடங்களில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. 2-வது நாள் தஞ்சையை அடுத்த சித்திரக்குடியில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. நேற்று 3-வது நாள் தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் ரெயில் நிலையத்தை அடுத்துள்ள ரெயில்வே கேட் அருகே நடைபெற்றது.
36 பேர் கைது
எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு விவசாயிகள், காவிரி உரிமை மீட்புக்குழுவினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார்.
இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மணிமொழியன், மாவட்ட செயலாளர் ஜெகதீசன், இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சிமியோன்சேவியர்ராஜ், திரைப்பட இயக்குனர் கவுதமன், தமிழ்தேசிய பேரியக்க தலைமை செயற்குழு உறுப்பினர் வைகறை, மாவட்ட செயலாளர் குழ.பால்ராசு, உழவர் உரிமை பேரியக்க ஒருங்கிணைப்பாளர் தங்கராசு உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர். காலை 10.30 மணி முதல் 11 மணி வரை ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதில் 3 பெண்கள் உள்பட 36 பேர் கைது செய்யப்பட்டனர்.