தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு காண்டிராக்டர் கடிதம் அனுப்பிவைத்த நண்பர்களிடம் விசாரணை
அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பரான நாமக்கல் காண்டிராக்டர் சுப்பிரமணியன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, அவர் கடிதம் அனுப்பிவைத்த நண்பர்களிடம் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.
நாமக்கல்,
நாமக்கல்-மோகனூர் சாலை ஆசிரியர் குடியிருப்பில் வசித்து வந்தவர் காண்டிராக்டர் சுப்பிரமணியன் (வயது 58). இவர் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் ஆவார். கடந்த மாதம் 7-ந் தேதி அமைச்சரின் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடந்தபோது, இவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனை நடந்தபோது சுப்பிரமணியன் கட்டுமான சங்கத்தின் கூட்டம் ஒன்றில் பங்கேற்க நண்பர்களுடன் வெளிநாடு சென்றிருந்தார். பின்னர் சென்னை வருமானவரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான சுப்பிரமணியன், கடந்த 9-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வருவதாக கூறிவிட்டு நாமக்கல் திரும்பினார். இந்த நிலையில் 8-ந் தேதி அவர் செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றம்
இதுதொடர்பாக மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்த நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சென்னை சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியமூர்த்தி கடந்த 13 மற்றும் 14-ந் தேதிகளில் நாமக்கல்லில் முகாமிட்டு விசாரணை நடத்தினார். பின்னர் சென்னை திரும்பிய அவர் நேற்று மீண்டும் 2-ம் கட்ட விசாரணையை தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் நேற்று நாமக்கல் வரவில்லை. அவர் இன்னும் ஓரிரு நாட்களில் நாமக்கல் வந்து, 2-ம் கட்ட விசாரணையை தொடங்குவார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நண்பர்களிடம் விசாரணை
இதற்கிடையே இந்த வழக்கின் முதல்கட்ட விசாரணையில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சுப்பிரமணியன், அவரது மனைவி, நண்பர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உள்பட 13 பேருக்கு தற்கொலை செய்வதற்கான காரணத்தை குறிப்பிட்டு கடிதம் எழுதி இருந்தது தெரியவந்தது. இவ்வாறு கடிதம் அனுப்பி வைக்கப்பட்ட நண்பர்கள் 5 பேருக்கு சம்மன் அனுப்பி அவர்களை வரவழைத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் சுப்பிரமணியனுடன் வெளிநாடு சென்ற நண்பர்களிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க திட்டமிட்டு உள்ளனர். இறுதியாக சுப்பிரமணியன் தற்கொலைக்கு காரணம் என கடிதத்தில் குறிப்பிட்டு உள்ள உறவினரான சக காண்டிராக்டர், வருமான வரித்துறை உயர் அதிகாரியிடம் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.