ஏரியில் வண்டல் மண் எடுக்கும் பணி வெற்றிவேல் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
காடையாம்பட்டி தாலுகா கோட்டகுள்ளமுடையான் ஏரியில் வண்டல் மண் எடுக்கும் பணி வெற்றிவேல் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.;
ஓமலூர்,
காடையாம்பட்டி தாலுகா கோட்டகுள்ளமுடையான் ஏரியில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்கும் பணி தொடக்கவிழா நடைபெற்றது. காடையாம்பட்டி தாசில்தார் ராஜேஷ்குமார் தலைமை தாங்கினார். மேட்டூர் உதவி கலெக்டர் மேகநாதரெட்டி முன்னிலை வகித்தார். இதில் ஓமலூர் எம்.எல்.ஏ. வெற்றிவேல் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு அனுமதி உத்தரவு(பர்மிட்) வழங்கி மண் எடுக்கும் பணியினை தொடங்கி வைத்தார். இதில் காடையாம்பட்டி ஒன்றிய ஆணையாளர் எழிலரசி, பொதுப்பணி துறை உதவி செயற்பொறியாளர் வசந்தன், உதவி பொறியாளர் கவுரிசங்கரி, காடையாம்பட்டி ஒன்றிய அ.தி.மு.க.(அம்மா) அணி செயலாளர் சித்தேஸ்வரன், ஒன்றிய பொருளாளர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் கஞ்சநாயக்கன்பட்டி வடமனேரியிலும் வண்டல் மண் எடுக்கும் பணியினை வெற்றிவேல் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
கோட்டகுள்ளமுடையான் ஏரியில் வண்டல் மண் எடுக்க 449 விவசாயிகள் மனு கொடுத்துள்ளனர். இந்தஏரியில் மண் அள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் எனவும், இதனை பயன்படுத்தி தனியார் செங்கல் சூளை உரிமையாளர்கள் மண் அள்ளி செல்லாமல் அதிகாரிகள் கண்காணிக்கவேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.