சித்தா, யுனானி மருத்துவ டாக்டர்கள் மீதான நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு சித்த மருத்துவ கவுன்சில் முன்பு சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி மருத்துவம் படித்த டாக்டர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை
சென்னை திரு.வி.க. நகர் பகுதியில் சித்த மருத்துவ டாக்டர் ஒருவரும், யுனானி மருத்துவ டாக்டர் ஒருவரும் நோயாளிகளுக்கு அலோபதி சிகிச்சை அளித்ததாக கூறி அவர்கள் மீது ஊரக சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் உத்தரவின் பேரில் மருந்து ஆய்வாளர், போலீசார் ஆகியோர் அவர்களது கிளினிக்கிற்கு சென்று அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்து சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு சித்த மருத்துவ கவுன்சில் முன்பு சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி மருத்துவம் படித்த டாக்டர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு தென்னக யுனானி மருத்துவ சங்கத்தின் பொதுச்செயலாளர் ரகிமுல்லா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டம் குறித்து அவர் கூறும்போது, ‘சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி மருத்துவம் படித்த டாக்டர்கள் மீது ஏதேனும் புகார் வந்தால் அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க இந்திய சித்த மருத்துவ கவுன்சிலுக்கு தான் அதிகாரம் உள்ளது. போலீசார் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நடவடிக்கை மேற்கொள்வது நியாயமற்றது’ என்றார்.
இதன்பின்பு அவர்கள், ஊரக சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர், மருந்து ஆய்வாளர், ஓட்டேரி துணை போலீஸ் கமிஷனர், உதவி போலீஸ் கமிஷனர், திரு.வி.க.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர்.