திருநின்றவூரில் ஓய்வுபெற்ற சப்–இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை

திருநின்றவூரில் ஓய்வுபெற்ற சப்–இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2017-05-17 22:30 GMT

ஆவடி,

திருநின்றவூரை அடுத்த நத்தம்மேடு ராயல் கேட் பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 56). இவர் சென்னை தண்டையார்பேட்டை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி 2 ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வுபெற்றார்.

இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று மாலை வீட்டில் பாபு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த திருநின்றவூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்