கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி மீண்டும் தொடக்கம்
கல்பாக்கத்தில் உள்ள சென்னை அணுமின்நிலையத்தில் இரு அலகுகளில் தலா 200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
கல்பாக்கம்,
கல்பாக்கத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை அணுமின்நிலையத்தில் இரு அலகுகளில் தலா 200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த இரண்டு அலகுகளிலும் மாறிமாறி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
அந்த வகையில் கடந்த மார்ச் 19-ந் தேதி, முதல் அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது பராமரிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதால் நேற்று மாலை 5.25 மணி அளவில், முதல் அலகில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் 110 மெகாவாட் உற்பத்தி தொடங்கப்பட்டு, படிப்படியாக 200 மெகாவாட் மின்சார உற்பத்தியை எட்டும் என கூறப்படுகிறது.