கொடைரோடு அருகே மதுக்கடைக்கு பூட்டு போட முயன்ற பெண்கள்
கொடைரோடு அருகே மதுக் கடைக்கு பெண்கள் பூட்டு போட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொடைரோடு,
கொடைரோட்டை அடுத்துள்ள மாலையகவுண்டன்பட்டியில் ஆள் இல்லாத ரெயில்வே கேட் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருக்கு சொந்தமான தோட்டத்தில் சமீபத்தில் புதிதாக மதுபான கடை திறக்கப்பட்டது. இதற்கு மாலையகண்டன்பட்டி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த னர். இதனை கண்டித்து வத்தலக்குண்டு-கொடைரோடு செல்லும் சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மதுபான கடையை மூட வேண்டும் என பொதுமக்கள் மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. பொதுமக்களின் எதிர்ப்பை மீறி மதுபான கடை செயல்பட்டு வந்தது.
பூட்டு போட முயற்சி
இந்தநிலையில் நேற்று மாலையகவுண்டன்பட்டியில் இருந்து, மதுபான கடையை பூட்டு போட்டு பூட்டுவதற்காக பெண்கள் திரண்டு சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், ஒருத்தட்டு கிராம வருவாய் ஆய்வாளர் செல்வி மற்றும் போலீசார், பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, உடனடியாக மதுபான கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அதன்பின்னர் தற்காலிகமாக மதுபான கடையை ஊழியர்கள் மூடிவிட்டனர். மேலும் அந்த மதுபான கடையை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தினால் கொடைரோடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.