புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.;
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று மாலை தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். அரசு அலுவலக உதவியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர்கள் சங்க மாவட்ட தலைவர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட செயலாளர் முகமதுகாஜா வரவேற்றார்.
கோரிக்கைகள்
ஆர்ப்பாட்டத்தில் பொது நூலகத்துறை அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் செல்வராஜ், ஊர்தி ஓட்டுனர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் பொன்முடி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு முன்பு 20 சதவீதம் இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும், அரசு அலுவலர்களின் அகவிலைப்படி 50 சதவீதத்தை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பு சங்கங்களின் மாவட்ட, வட்டக்கிளை நிர்வாகிகள் மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர். முடிவில் அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர்கள் சங்க மாவட்ட செயலாளர் சுகுந்தகுமார் நன்றி கூறினார்.