வைப்புத்தொகையை வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம்: கூட்டுறவு சங்கத்தலைவர் உள்பட 2 பேர் கைது
வைப்புத்தொகையை வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கூட்டுறவு சங்கத்தலைவர் உள்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
மதுரை,
மதுரை பை-பாஸ் சாலையில் அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் தலைவராக அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த வீரேசன் இருந்து வருகிறார். இங்கு 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த சங்கத்தின் உறுப்பினராக விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ஜெயராஜ் இருந்து வந்தார். சமீபத்தில் அவர் இறந்துவிட்டார். இதனையடுத்து கூட்டுறவு சங்கத்தில் அவரது கணக்கில் இருந்த வைப்புத்தொகை ரூ.50,270-ஐ வழங்குமாறு ஜெயராஜின் மகன் முத்துக்குமார் விண்ணப்பித்தார்.
ரூ.3 ஆயிரம் லஞ்சம்
அந்த தொகையை வழங்க வேண்டும் என்றால் ரூ.3 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கூட்டுறவு சங்கத் தலைவர் வீரேசன், எழுத்தர் பூமிநாதன் ஆகியோர் கேட்டனர். இதுகுறித்து முத்துக் குமார் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.
போலீசார் கொடுத்த ஆலோசனையின்பேரில் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை நேற்று மாலை கூட்டுறவு சங்க அலுவலகத்தில் இருந்த வீரேசன், பூமிநாதன் ஆகியோரிடம் முத்துக் குமார் கொடுத்தார்.
2 பேர் கைது
அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வீரேசனையும், பூமிநாதனையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.