கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் தாலுகாக்களில் ஜமாபந்தி தொடங்கியது

ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி தாலுகாக்களில் நேற்று ஜமாபந்தி தொடங்கியது. ஏராளமான பொதுமக்கள் ஜமாபந்தியில் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

Update: 2017-05-17 21:00 GMT
ஓட்டப்பிடாரம்,

ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி தாலுகாக்களில் நேற்று ஜமாபந்தி தொடங்கியது. ஏராளமான பொதுமக்கள் ஜமாபந்தியில் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

ஜமாபந்தி

தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு பணிகள்(ஜமாபந்தி) நேற்று முதல் தொடங்கப்பட்டு உள்ளன. அதன்படி மாவட்டத்தில் உள்ள 8 தாலுகா அலுவலகங்களிலும் ஜமாபந்தி நேற்று நடந்தது. ஓட்டப்பிடாரம் தாலுகாவில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் தலைமையில் ஜமாபந்தி நடந்தது. தாசில்தார் நம்பிராயர் முன்னிலை வகித்தார்.

நேற்று எப்போதும்வென்றான் குறுவட்டத்தை சேர்ந்த வாலசமுத்திரம், சிந்தலைக்கட்டை, கே.சண்முகபுரம், எஸ்.குமாரபுரம், எப்போதும்வென்றான், ஜெகவீரபாண்டியபுரம், காட்டுநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள் மனு கொடுத்தனர்.

இன்று

இன்று(வியாழக்கிழமை) சந்திரகிரி, ஆதனூர், கொல்லம்பரும்பு, கச்சேரிதளவாய்புரம், முள்ளூர்முத்துகுமாரபுரம், மணியாச்சி குறுவட்டத்தை சேர்ந்த சவரிமங்களம், மேலபாண்டியாபுரம் ஆகிய கிராமத்துக்கும், நாளை(வெள்ளிகிழமை) ஒட்டநத்தம், மணியாச்சி, சங்கம்பட்டி, அக்கநாயக்கன்பட்டி, கொடியன்குளம், பாறைக்கூட்டம், முறம்பன் ஆகிய கிராமத்துக்கும் 23–ந்தேதி(செவ்வாய்கிழமை) பரிவல்லிக்கோட்டை குறுவட்டத்தை சேர்ந்த இளவேலங்கால், மலைப்பட்டி, ஓணமாக்குளம், பரிவல்லிக்கோட்டை, தென்னம்பட்டி, மருதன்வாழ்வு நாரைக்கிணறு ஆகிய கிராமத்துக்கும் 24–ந்தேதி(புதன்கிழமை) கலப்பைபட்டி, கோவிந்தாபுரம், கீழக்கோட்டை, கொத்தாளி வேடநத்தம் குறுவட்டத்தை சேர்ந்த தருவைக்குளம், வேடநத்தம், தெற்கு கல்மேடு ஆகிய கிராமத்துக்கும் ஜமாபந்தி நடக்கிறது.

25–ந் தேதி

25–ந்தேதி(வியாழக்கிழமை) மேலஅரசடி, கீழஅரசடி, புதூர்பாண்டியாபுரம், வேப்பலோடை, பட்டிணமருதூர், மேலமருதூர், டி.துரைசாமிபுரம் ஆகிய கிராமத்துக்கும், 26–ந்தேதி(வெள்ளிக்கிழமை) பசுவந்தனை குறுவட்டத்தை சேர்ந்த பசுவந்தனை, கீழமங்களம், வெங்கடேசுவரபுரம், கீழமுடிமண், நாகம்பட்டி, மீனாட்சிபுரம், முத்துராமலிங்கபுரம் ஆகிய கிராமத்துக்கும் 30–ந்தேதி(செவ்வாய்கிழமை) குமரெட்டியாபுரம், வெள்ளாரம், பி.துரைசாமிபுரம், குதிரைக்குளம், சில்லாங்குளம், ஓட்டப்பிடாரம் குறுவட்டத்தை சேர்ந்த சில்லாநத்தம், தெற்குவீரபாண்டியபுரம் ஆகிய கிராமத்துக்கும் 31–ந்தேதி சாமிநத்தம், புதியம்புத்தூர், ஜம்புலிங்கபுரம், ஆரைக்குளம், குலசேகரநல்லூர், பாஞ்சாலங்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய கிராமங்களுக்கு ஜமாபந்தி நடக்கிறது.

கோவில்பட்டி தாலுகாவில்...

கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில், வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நேற்று காலையில் தொடங்கியது. மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜையா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கழுகுமலை, கே.வெங்கடேசுவரபுரம், தெற்கு கழுகுமலை, கத்தாளம்பட்டி, கரடிகுளம், கே.சுப்பிரமணியபுரம், காலாங்கரைப்பட்டி, எஸ்.குமரெட்டையாபுரம், காளாம்பட்டி, கட்டாரங்குளம் ஆகிய பகுதி மக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

பெரும்பாலான கோரிக்கை மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் பயனாளிகளுக்கு பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தாசில்தார் ஜான்சன் தேவசகாயம், துணை தாசில்தார்கள் மாடசாமி, நாகராஜன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இன்று, கயத்தாறு...

இன்று (வியாழக்கிழமை) சரவணாபுரம், சிதம்பரம்பட்டி, செட்டிகுறிச்சி, திருமங்கலகுறிச்சி, வானரமுட்டி, கயத்தாறு உள்வட்டத்தைச் சேர்ந்த வெள்ளாளங்கோட்டை, பணிக்கர்குளம், கே.உசிலங்குளம், அய்யனாரூத்து, கயத்தாறு, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கான ஜமாபந்தி நடக்கிறது.

எனவே அப்பகுதி மக்கள் ஜமாபந்தியில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கி பயன்பெறலாம். தொடர்ந்து வருகிற 31–ந்தேதி வரை (சனி, ஞாயிறு, திங்கள் நீங்கலாக) ஜமாபந்தி நடக்கிறது.

மேலும் செய்திகள்