வீடு புகுந்து பெண் உடைமாற்றுவதை மறைந்து இருந்து பார்த்த வாலிபர் கைது

சுசீந்திரம் அருகே வீடு புகுந்து பெண் உடை மாற்றுவதை மறைந்து இருந்து பார்த்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2017-05-16 22:15 GMT
மேலகிருஷ்ணன்புதூர்,

சுசீந்திரம் அருகே மேலகிருஷ்ணன்புதூரை சேர்ந்தவர் ஆல்வின் சுதன் (வயது30), கட்டிட தொழிலாளி. இவரது வீடு அருகே ஒரு பெண் தனது மகளுடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவரது மகள் வேலைக்கு சென்றுவிட்டார். பின்னர், வீட்டில் தனியாக இருந்த பெண் குளித்து விட்டு அறையில் உடை மாற்றி கொண்டிருந்தார்.

அப்போது அறைக்குள் பக்கத்து வீட்டு வாலிபர் ஆல்வின் சுதன் மறைந்து நிற்பதை கண்டு திடுக்கிட்டார். உடனே அவர் அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்து கூச்சல் போட்டார்.

போலீசில் ஓப்படைப்பு


சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும், அந்த பெண்ணின் உறவினர்களும் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் வீட்டுக்குள் புகுந்த ஆல்வின் சுதனை பிடித்தனர். பின்னர் இது பற்றி சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சப்–இன்ஸ்பெக்டர் பரத்லிங்கம், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் காந்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்களிடம் ஆல்வின் சுதனை அப்பகுதி மக்கள் ஒப்படைத்தனர். அவரை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்