பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கர்நாடகம் வருகை எடியூரப்பா பேட்டி
வருகிற ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கர்நாடகத்துக்கு வருகை தர உள்ளதாக எடியூரப்பா கூறினார்.
பெங்களூரு,
எங்கள் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா வருகிற ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் கர்நாடகம் வருகிறார். கட்சியை பலப்படுத்துவது, வேட்பாளர்களை தேர்வு செய்வது போன்ற பணிகள் குறித்து அவர் ஆலோசனை நடத்துகிறார். குறைந்தது 3 அல்லது 4 நாட்கள் அவர் கர்நாடகத்தில் தங்கி இருந்து மாநில தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபடுவார்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் 150 தொகுதிகளிலும், பாராளுமன்ற தேர்தலில் 25 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே எங்களின் குறிக்கோள். எங்கள் கட்சியில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அடிமட்டத்தில் இருந்து கட்சியை பலப்படுத்தி, ஆட்சியை பிடிக்க தந்திரங்கள் வகுத்து செயல்படுவது தான் சவாலான பணி ஆகும்.
கொள்ளையடிக்க திட்டம்
கர்நாடக காங்கிரஸ் அரசு அனைத்து துறையிலும் கொள்ளையடிக்க திட்டம் தீட்டி வருகிறது. ரூ.100 கோடி திட்டத்திற்கு ரூ.500 கோடிக்கு மதிப்பீட்டை தயாரிக்கிறார்கள். பொதுப்பணி, நீர்ப்பாசனம், மின்சாரம் போன்ற துறைகளில் அதிகளவில் கொள்ளை அடிக்கப்படுகிறது. திட்ட விவரங்களை கேட்டால், அதிகாரிகள் கொடுக்க மறுக்கிறார்கள். மாநிலத்தில் வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளை மந்திரிகள் ஆய்வு செய்யவில்லை.
சித்தராமையாவுக்கு ஒரே நாளில் 2 சினிமா பார்க்கவும், துபாய்க்கு செல்லவும் நேரம் இருக்கிறது. ஆனால் வறட்சி பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய அவருக்கு நேரம் இல்லை. சித்தராமையாவை மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மதிப்பதே இல்லை. அதிகாரிகளும் முதல்-மந்திரியின் பேச்சை கேட்பது இல்லை. எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்வதே இந்த அரசுக்கு வேலையாகிவிட்டது.
உண்மைக்கு மாறானது
நாங்கள் அரசு மீது வைத்த குற்றச்சாட்டுகளுக்கு சித்தராமையா புள்ளி விவரங்களுடன் பதில் சொல்லி இருக்க வேண்டும். அதை விடுத்து எதிர்க்கட்சிகளை சித்தராமையா தேவை இல்லாமல் குறை சொல்கிறார். சித்தராமையா வெளியிட்ட சாதனை கையேட்டில் இடம் பெற்றுள்ள விவரங்கள் உண்மைக்கு மாறானது. நாங்கள் கொண்டு வந்த சில திட்டங்களை சித்தராமையா கைவிட்டுள்ளார்.
மத்திய அரசின் திட்டங்களை இந்த அரசு தன்னுடையது என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறது. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு மாநிலத்தின் கடன் சுமை அதிகரித்துள்ளது. இது தான் இந்த அரசின் சாதனை ஆகும். நாங்கள் ஆட்சியில் இருந்தபோது ரூ.1 லட்சம் கோடி கடன் இருந்தது. இது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.2 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. நிதி ஒழுங்குமுறை இல்லாமல் இருப்பது இதற்கு காரணம் ஆகும்.
கவர்னரிடம் அறிக்கை
வருகிற 18-ந் தேதி நான், மக்கள் தொடர்பு சுற்றுப்பயணத்தை தொடங்குகிறேன். இது ஜூன் 26-ந் தேதி வரை நடைபெறும். என்னுடன் மத்திய மந்திரிகள், முன்னணி தலைவர்கள் வருவார்கள். வறட்சி பாதிப்பு குறித்து ஆய்வு செய்து கவர்னரிடம் அறிக்கை தாக்கல் செய்வோம். இதற்கு முன்பு வறட்சி குறித்து ஆய்வு செய்த அறிக்கையையும் கவர்னரிடமே கொடுத்தோம்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.